அஸ்வின் அரிதான வீரர்.. 17 – 19 வயசுல எங்களோட கேரியர் தலைகீழாக மாறிடுச்சு.. ரோஹித் பாராட்டு

Rohit Sharma 2
- Advertisement -

தரம்சாலாவில் மார்ச் 7ஆம் தேதி துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5வது போட்டியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது இந்திய வீரர் என்ற சாதனை படைக்க உள்ளார். ஆரம்ப காலங்களில் பேட்ஸ்மேனாக கேரியரை துவங்கிய அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அசத்தினார்.

அதன் காரணமாக தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் 2011 – 2017 வரை 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை ஸ்பின்னராக நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். அதைத்தொடர்ந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டாலும் மனம் தளராமல் போராடி 2023 உலகக் கோப்பை வரை கம்பேக் கொடுத்த அவர் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்து நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

- Advertisement -

ரோஹித் பாராட்டு:
இந்நிலையில் அரிதான வீரரான அஸ்வின் ஆரம்பத்தில் பேட்ஸ்மனாகவும் தாம் பவுலராகவும் கேரியரை துவக்கியதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தாங்கள் தலைகீழாக விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் அஸ்வினுக்கு 100வது போட்டிக்கு முன்பாக கொடுத்த பாராட்டு பின்வருமாறு. “100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எந்த வீரருக்கும் மிகப்பெரிய சாதனையாகும். அவர் எங்களுடைய மேட்ச் வின்னராக இருந்து வருகிறார்”

“அவர் எங்களுக்கு செய்துள்ளதை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. கடந்த 5 – 7 வருடங்களாக நாங்கள் விளையாடிய ஒவ்வொரு தொடரிலும் அவர் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அவரைப் போன்ற வீரரை கொண்டிருப்பது அரிதாகும். அவருக்கு 100வது போட்டிக்காக வாழ்த்து தெரிவிக்கிறேன். இது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும். ஒரு கேப்டனாக அவரை நான் அண்டர்-17, அண்டர்-19 அளவிலிருந்து பார்த்து வருகிறேன்”

- Advertisement -

“அப்போது துவக்க வீரராக செயல்பட்ட அவர் பின்னர் பவுலிங் செய்யத் தொடங்கினார். அந்த சமயத்தில் பந்து வீசிய நான் பின்னர் பேட்ஸ்மேனாக மாறினேன். நாளடைவில் அது எங்களுக்கும் இந்திய அணிக்கும் நல்லதாக அமைந்தது. ஒரு வீரராக தன்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ள அஸ்வின் அறிவுப்பூர்வமானவர். அவரைப் போன்ற வீரரை உங்களுடைய அணியில் கொண்டிருந்தால் நீங்கள் அதிகமாக சிந்திக்க வேண்டியதில்லை”

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் அசத்தலான ஆட்டம்.. இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு – கிடைத்துள்ள கவுரவம்

“கையில் பந்தை கொடுத்தால் எப்படி வீச வேண்டும், என்ன ஃபீல்டிங் அமைக்க வேண்டும் என்பதை அவரே பார்த்துக் கொள்வார். அதைத் தவிர்த்து களத்திற்கு வெளியே போட்டித் துவங்குவதற்கு ஒருநாள் முன்பாக ஒரே ஸ்டம்ப்பில் 45 நிமிடங்கள் பந்து வீசிவது உட்பட அவர் கடினமான பயிற்சிகளை செய்வதை பார்த்துள்ளேன். அதை விட மிகப்பெரிய விஷயம் என்னவெனில் ராஜ்கோட் போட்டியின் போது அவசரமாக வெளியேறிய அவர் மீண்டும் அழைத்து அணிக்காக விளையாட விரும்புவதாக சொன்னார். அது போன்ற வீரர்களை நீங்கள் அரிதாகவே பார்க்க முடியும்” என்று கூறினார்.

Advertisement