இங்கிலாந்து தொடரில் அசத்தலான ஆட்டம்.. இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு – கிடைத்துள்ள கவுரவம்

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு அடுத்ததாக 3 வெற்றிகளை பெற்று மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது போட்டி மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது முடிவடையும் தொடர்களுக்கு இடையே ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

- Advertisement -

அந்த வகையில் இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்திய அணியைச் சேர்ந்த இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் 10-க்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் விளாசியுஉள்ள ஜெய்ஸ்வால் இந்து தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரராக பார்க்கப்படும் வேளையில் முதல் முறையாக அவர் டாப் 10-ற்குள் நுழைந்து பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா 11-வது இடத்தை பிடித்துள்ளார் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் முன்னேறியுள்ளார். மேலும் இரண்டாவது இடத்திலிருந்து ஸ்டீவன் ஸ்மித் ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஃசர்டிபிகேட் இல்லனா எல்லா இந்திய வீரர்களும் அதை செஞ்சு தான் ஆகணும்.. கேப்டன் ரோஹித் ஸ்ட்ரிக்ட்

பவுலர்களின் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதனை தவிர்த்து டெஸ்ட் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement