ஃசர்டிபிகேட் இல்லனா எல்லா இந்திய வீரர்களும் அதை செஞ்சு தான் ஆகணும்.. கேப்டன் ரோஹித் ஸ்ட்ரிக்ட்

Rohit Sharma 9
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் – இஷான் கிசான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அவர்களை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கடந்த மாதம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்டு அந்த 2 வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதன் காரணமாக அந்த இருவரையும் சம்பள பட்டியலில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. அத்துடன் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத சமயங்களில் அனைத்து இந்திய வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ரோஹித் கருத்து:
இது ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்து ரஞ்சிக் கோப்பையை புறக்கணிக்க நினைக்கும் வீரர்களுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளதாக நிறைய முன்னாள் வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயத்தை சந்தித்து அல்லது உடல் ரீதியாக விளையாட முடியாது என்ற மருத்துவரின் சான்றிதழ் இருந்தால் மட்டும் ரஞ்சிக் கோப்பையில் யாரும் விளையாட வேண்டியதில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மற்ற படி தாம் உட்பட ஃபிட்டாக உள்ள அனைத்து இந்திய வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கண்டிப்புடன் கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது பற்றி நீண்ட காலமாக பேச்சுவார்த்தை இருந்தது. ஒரு வீரரால் விளையாட முடியாது என்று மருத்துவ குழுவினர் சான்றிதழ் வழங்கினால் அல்லது காயமடைந்தால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடியாது”

- Advertisement -

“ஆனால் வீரர்கள் தயாராக இருக்கும் போது அவர்கள் தங்களை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் ஃபிட்டாக நன்றாக இருக்கும் பட்சத்தில் உள்ளூரில் சென்று விளையாடுவது அவசியமாகும். சில வீரர்கள் மட்டுமல்லாமல் நன்றாக இருக்கும் அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த வாரம் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டிகளை பாருங்கள்”

இதையும் படிங்க: அதை பாத்துட்டோம்.. 3 – 1ன்னு வீட்டுக்கு கிளம்புவோம்ன்னு நினைக்காதீங்க.. 5வது போட்டி பற்றி பேசிய பென் ஸ்டோக்ஸ்

“நான் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதிய போட்டியை பார்த்தேன். அதே போன்ற ஆர்வத்துடன் நடைபெற்ற மற்றொரு போட்டியில் விதர்பா வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன். அது போன்ற தரமான போட்டிகள் நடைபெறும் போது அதை அனைவரும் பார்க்க வருவார்கள். எனவே இந்திய கிரிக்கெட்டின் அடிப்படையான உள்ளூர் போட்டிகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement