இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. அதோடு கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சிஎஸ்கே அணியானது இம்முறை அதிலிருந்து மீண்டு வந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
அதோடு தோனிக்கு இந்த தொடரானது கடைசி சீசனாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் மேலும் ஒரு சீசன் தோனி விளையாடுவதாக அறிவித்துள்ளதால் அடுத்து வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரானது அனைவரது மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த தொடருக்கு இன்னும் பல மாதங்கள் நேரம் உள்ளதால் நிச்சயம் தோனி நல்ல முடிவை எடுத்து மீண்டும் கேப்டனாகவே விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக வாய்ப்புள்ளது என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மோசமான செயல்பாடுகள் காரணமாக அணியிலிருந்து வெளியே அமர வைக்கப்பட்டார். இருந்தாலும் தரமான ஆல் ரவுண்டான அவர் நிச்சயம் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்த ஆண்டு அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஏனெனில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு ஓய்விலிருந்து மீண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடினால் அடுத்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் தனது காலில் அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : IND vs IRE : இந்தியா அயர்லாந்து டி20 தொடரை எந்த சேனலில் பாக்கலாம்? – போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?
இதன் காரணமாக அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போக கூட வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ஸ்டோக்ஸ் எதிர்வரும் இந்த தொடரில் விளையாட முடியாமல் போனால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்து பாரத்தால் மட்டுமே தெரியும்.