IND vs IRE : இந்தியா அயர்லாந்து டி20 தொடரை எந்த சேனலில் பாக்கலாம்? – போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?

IND-vs-IRE
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக அயர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதன்மை இந்திய அணியானது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய வேளையில் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இழந்தது.

அதனை தொடர்ந்து சீனியர் வீரர்கள் அனைவருக்கும் தற்போது ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான மூன்று டி20 போட்டிகளும் எங்கு நடைபெறுகிறது? போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்குகிறது? எந்த சேனலில் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கி 23-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி ஆகஸ்ட் 18-ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23-ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த மூன்று டி20 போட்டிகளுமே டப்ளின் நகரில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை சோனி குடும்ப நிறுவனம் பெற்றுள்ளதால் சோனி தொலைக்காட்சியில் இந்த டி20 தொடரை காணலாம்.

இதையும் படிங்க : இதுவும் நல்லதுக்கு தான், 26 வயதிலேயே ஓய்வு முடிவை அறிவித்த வணிந்து ஹசரங்கா, இலங்கை ரசிகர்கள் ஏமாற்றம் – காரணம் என்ன?

அதுமட்டும் இன்றி ஆன்லைன் மூலம் இந்த தொடரை காண விரும்புவோர் ஃபேன்கோடு மற்றும் ஜியோ சினிமா ஆப்பில் இந்த தொடரை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement