டாஸ் வென்று நாங்க முதலில் பேட்டிங் செய்த இதுதான் காரணம். டாசுக்கு பிறகு பேசிய – பென் ஸ்டோக்ஸ் சொன்னது என்ன?

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இந்தியாவில் இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது நிச்சயமாக சவால்கள் நிறைந்திருக்கும்.

இருந்தாலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு அழுத்தத்தை அளிக்க முடியும். அதனாலே முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அதேபோன்று இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் மிகச் சிறப்பாக தயாராகி உள்ளதால் நிச்சயம் எங்களால் ரன்களை குவிக்க முடியும்.

- Advertisement -

மேலும் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் இந்திய அணி எவ்வளவு சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது எங்களுக்கு மட்டும் இன்றி அனைத்து அணிகளுக்குமே தெரியும். அதே போன்று இந்திய அணி ஒரு மிகச் சிறப்பான வெற்றிகரமான அணி அவர்களுக்கு எதிரான இந்த போட்டி எங்கள் அணி வீரர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் எங்களது அணி சார்பாக ஹார்ட்லி அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக ரிக்கி பாண்டிங் மாபெரும் சாதனையை சமன் செய்த – ஜோ ரூட் (விவரம் இதோ)

அதேபோன்று ரேஹன் அகமது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இருந்தாலும் இவர்களுக்கு லீடராக ஜாக் லீச் எங்களது அணியில் விளையாடுவதால் நிச்சயம் இந்த கூட்டணி சிறப்பாக செயல்படும். அதேபோன்று இந்த போட்டியில் எங்களது அணியின் ஒரு எக்ஸ் பேக்டர் வீரராக மார்க் வுட் இருக்கிறார் என்றும் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement