- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2002 உ.கோ ஜெய்ச்சுட்டு கங்குலி சட்டையை சுழற்றினாரா? ஆர்ச்சர் குழப்பதை தீர்த்தது பற்றி ஸ்டோக்ஸ் பேட்டி

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ஜூலை 10ஆம் துவங்கி நடைபெற்ற அப்போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலை பெற்றது. மறுபுறம் இந்தியா போராடி தோல்வியை சந்தித்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

முன்னதாக இதே லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடிக்காமலேயே இங்கிலாந்து கோப்பையை வென்றது. 2019 ஜூலை 14ஆம் தேதி இதே மைதானத்தில் அதிக அதிக பவுண்டரிகள் அடித்தவர்களுக்கு கோப்பை என்ற ஐசிசியின் முட்டாள்தனமான விதிமுறையால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதனுடைய 6வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

- Advertisement -

2002 உலகக் கோப்பையா:

அன்றைய நாள் காலையில் “இன்று தான் 2002 உலகக் கோப்பையை வென்ற பின் சௌரவ் கங்குலி சட்டையை கழற்றி சுழற்றிய நாளா?” என்று ஜோப்ரா ஆர்ச்சர் தம்மிடம் கேட்டதாக பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். அதற்கு இல்லை 6 வருடங்களுக்கு முன் நாம் உலகக்கோப்பை வென்ற நாள் என்று சொல்லி அவருடைய குழப்பத்தை தீர்த்ததாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை தொலைகட்சியில் ஸ்டோக்ஸ் பேசியது பின்வருமாறு.

“ஜோப்ரா ஆர்ச்சருக்கு இன்றைய நாளை நான் நினைவுப்படுத்தினேன். அப்போது “இது கங்குலி உலகக் கோப்பை ஃபைனலில் சட்டையை சுழற்றி நாளா?” என்று ஆர்ச்சர் என்னிடம் கேட்டார். அவர் அந்த 2002 ஒருநாள் போட்டியை உலகக்கோப்பை ஃபைனல் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அது 6 வருடங்களுக்கு முன்பாக இங்கே நடந்தது என்றும் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்”

- Advertisement -

ஆர்ச்சரின் குழப்பம்:

“அதைக் கேட்ட நான் “இல்லை, இது நாம் உலகக் கோப்பையை வென்ற நாள்” என்று ஆர்ச்சரிடம் பதிலளித்தேன். அதைக் கேட்ட அவர் “ஓ அப்படியா, ஆம் (ஆமால்ல)” என்று சொன்னார்” எனக் கூறினார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு கோப்பை இறுதிப்போட்டியில் 326 ரன்களை சேசிங் செய்து இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா கங்குலி தலைமையில் கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: ஒருத்தரை சீண்டுனா 11 பேரும் வந்து இந்தியாவை திருப்பி அடிப்போம்.. கில் படையை எச்சரித்த ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்

அதற்கு முந்தைய ஒருநாள் தொடரை வென்ற போது இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் மும்பையில் தம்முடைய சட்டையை கழற்றி சுழற்றி இந்தியாவை அவமானப்படுத்தினார். அதற்கு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் ஃபைனலில் இங்கிலாந்தை தோற்கடித்த போது கேப்டன் கங்குலி தம்முடைய சட்டையை சுழற்றி பதிலடி கொடுத்தார். அந்தப் போட்டியை ஆர்ச்சர் இத்தனை நாட்களாக உலகக்கோப்பையாக நினைத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது

- Advertisement -