ஒருத்தரை சீண்டுனா 11 பேரும் வந்து இந்தியாவை திருப்பி அடிப்போம்.. கில் படையை எச்சரித்த ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்

Ben Stokes 3
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்காக அசராத இந்திய அணி இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தக்க பதிலடி கொடுத்து தொடரையும் சமன் செய்தது.

அந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவை போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ராகுலை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் அடித்தும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

11 பேரும் சேர்ந்து அடிப்போம்:

முன்னதாக அப்போட்டியின் மூன்றாவது நாளில் மாலை வேளையில் இங்கிலாந்து 2 ஓவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதைத் தவிர்ப்பதற்காக இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்ற நேரத்தை வீணடித்தார். அதைப் பார்த்து கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் சில கெட்ட வார்த்தைகளை சொல்லி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதே போல கிராவ்லி – டக்கெட் ஆகிய இங்கிலாந்து துவக்க வீரர்களை இந்திய அணியினர் சூழ்ந்து பதிலடி கொடுத்தது பரபரப்பை உண்டாக்கியது. அதற்கு பதிலடியாக இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்தனர். கடைசியில் வெற்றியும் பெற்ற அவர்கள் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்து முன்னிலைப் பெற்றுள்ளார்கள்.

- Advertisement -

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் எச்சரிக்கை:

இந்நிலையில் எங்களுடைய ஒரு வீரரை சீண்டினால் கூட அதற்கு பதிலடியாக இங்கிலாந்தின் 11 வீரர்களும் திரும்பி வந்து இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய 2 ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஒரு ஓவரை எதிர்கொள்ள செல்லும் போது, அவர்களை எதிரணியின் 11 வீரர்களும் சுற்றி வளைப்பதைப் பார்ப்பது, எங்களுடைய அணியின் மறுபக்கத்தை கொண்டு வரும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இந்த ஆளுக்கு இதுவே அதிகம்.. இந்திய கேப்டன் சுப்மன் கில்லை சீண்டிய பென் டக்கெட் – என்ன நடந்தது?

அதே போல ஜோப்ரா ஆர்ச்சர் இளம் இந்திய அணியை எச்சரித்துள்ளது பின்வருமாறு. “நேற்று நாங்கள் அனைவரும் ஒரு அணியாக சேர்ந்து நாம் கொஞ்சம் மென்மையாக இருக்கிறோம் என்று எங்களிடமே சொல்லிக் கொண்டோம். மற்ற இடங்களுக்கு செல்லும் போது எங்களைப் போல் அங்குள்ள அணிகள் எங்களிடம் மென்மையாக நடந்து கொள்வதில்லை. எனவே நாங்களும் மாற வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement