இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 193 ரன்கள் என்கிற எளிய இலக்கை துரத்தி இருந்தாலும் அதனை எட்ட முடியாமல் வெறும் 170 ரன்கள் மட்டுமே குவித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
சுப்மன் கில்லை சீண்டிய பென் டக்கெட் :
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் வரை எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த சுவாரஸ்யம் நிகழ்ந்த வேளையில் போட்டி சற்றும் சலிப்பில்லாமல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியின் போது இந்திய வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை சீண்டுவதும், இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டுவதும் என படு சுவாரசியமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லை இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான பென் டக்கெட் சீண்டிய ஒரு சம்பவம் தற்போது ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 600 ரன்களுக்கு மேல் குவித்திருந்த வேளையில் மூன்றாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 22 ரன்கள் மட்டுமே குவித்தார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங் செய்யும்போது ரன் குவிக்க தடுமாறிய சுப்மன் கி0ல்லை விமர்சித்த பென் டக்கெட் அவரிடம் சென்று : 600 ரன்கள் இந்த தொடரில் அடித்தது அவருக்கு போதும். இந்த ஆளுக்கு 600 ரன்கள் எல்லாம் அதிகம் என்று அவரை வசைபாடும் வகையில் விமர்சித்து இருந்தார்.
இதையும் படிங்க : இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி.. இருந்தாலும் இறுதியில் இப்படி நடந்தது ஏமாற்றம் அளிக்கிறது – கங்குலி கருத்து
அந்த உரையாடல் ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்யும்போது சுப்மன் கில் அவர்களிடம் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பென் டக்கெட் இப்படி வார்த்தை சீண்டலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



