2021 மாதிரி அந்த திட்டத்தை போட்டாலும் இந்திய அணியால் எங்களை நிறுத்த முடியாது.. பென் ஃபோக்ஸ்

Ben Foakes
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக துவங்கியுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இந்தியா 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2வது இன்னிங்சில் ஓலி போப் 196 ரன்கள் குவித்ததால் தப்பிய இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் இந்தியாவை சேசிங் செய்ய விடாமல் 7 விக்கெட்டுகளை சாய்த்த டாம் ஹார்ட்லி 202 ரன்களுக்கு சுருட்டி இங்கிலாந்துக்கு மறக்க முடியாத மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

மனதளவில் உறுதி:
முன்னதாக 2021 இந்திய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அந்த அணியை திணறடித்த இந்தியா 3 – 1 கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை அதே போல அடுத்து வரும் போட்டிகளில் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்தாலும் அதில் இந்தியாவை தோற்கடிக்க மனதளவில் தயாராக உள்ளதாக இங்கிலாந்து வீரர் பென் ஃபோக்ஸ் கூறியுள்ளார்.

எனவே சுழலுக்கு சாதகமான பிட்ச் வைத்து தங்களை சாய்க்கும் திட்டத்துடன் இந்தியா வந்தாலும் அதை எதிர்கொண்டு வீழ்த்த தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிபிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “2021 தொடரின் முதல் போட்டி ஃப்ளாட்டான பிட்ச்சில் விளையாடப்பட்டது. அதில் நாங்கள் வென்றதால் அடுத்த 3 போட்டிகளில் அவர்கள் பொங்கி எழுந்தனர். அந்த 3 போட்டிகளின் பிட்ச்சுகள் நான் விளையாடியதிலேயே மிகவும் மோசமானது”

- Advertisement -

“எனவே அந்த சூழல்களில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு மனதளவில் எப்படி மாறுகிறீர்கள் என்பது முக்கியம். ஏனெனில் அந்த சூழ்நிலைகளில் பவுலர்கள் தான் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இத்தொடருக்கு முன்பு வரை அது போன்ற பிட்ச்களில் அவுட்டாகி விடுவோமோ என்ற பயம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் அது எங்களை நல்ல நிலைக்கு முன்னேற்றியது. எனவே தற்போது நாங்கள் அவுட்டாவதை பற்றி கவலைப்படுவதில்லை”

இதையும் படிங்க: அந்த விஷயத்தை தோனி – பிளெமிங்கை பாத்து நானும் – மெக்கல்லமும் ஃபாலோ பண்றோம்.. பென் ஸ்டோக்ஸ்

“மேலும் சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு விளையாட தயாராக இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டுமெனில் சில நேரங்களில் அது போன்ற பிட்ச்களில் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. இது போன்ற பிட்ச்களில் சிறப்பாக விளையாடுவதற்கு எங்களுடைய இளம் வீரர்கள் கூட நல்ல திட்டத்தை வைத்துள்ளனர்” என்று கூறினார்.

Advertisement