அந்த விஷயத்தை தோனி – பிளெமிங்கை பாத்து நானும் – மெக்கல்லமும் ஃபாலோ பண்றோம்.. பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes MS dhoni
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இத்தொடரில் இங்கிலாந்தை தெறிக்க விட்டு எளிதாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் நாங்கள் இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அந்த நிலையில் ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்று 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவை 4வது நாளில் மடக்கிய இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது.

- Advertisement -

தோனி – பிளெமிங் வழியில்:
அந்த வகையில் சுழலுக்கு சாதகமான மைதானத்திலும் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து நிரூபித்துள்ளது. இந்நிலையில் சென்னை ஐபிஎல் அணியில் எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து சிறந்த அணியை உருவாக்குவதற்கான முடிவை வேகமாக எடுக்கும் கலையை தாமும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்ருமாறு. “காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் தோனி மற்றும் பிளமிங் ஆகியோருடன் வேலை செய்துள்ளேன். அவர்கள் இருவரும் எப்படி ஒருவரையொருவர் பூர்த்தி செய்வார்கள் என்பது நான் பார்க்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்”

- Advertisement -

“பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். தோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்”

இதையும் படிங்க: விமானத்தில் பயணித்த போது ஏற்பட்ட பாதிப்பு.. அவசரமாக மடுத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட – இந்திய வீரர்

“எம்எஸ் தோனி மற்றும் பிளமிங் ஆகியோர் தேர்வு சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்” என்று கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement