- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 – 0ன்னு தோத்தாலும் கவலையில்ல.. இதை வெச்சு சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியாவை வீழ்த்துவோம்.. பென் டக்கெட்

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றி அதிரடியாக விளையாடுவோம் என்று எப்போதும் பேசி வரும் இங்கிலாந்து அணிக்கு இந்தியாவில் பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக சந்தித்த இந்த அடுத்தடுத்த தோல்விகள் இங்கிலாந்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற இங்கிலாந்து போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எங்களுக்கு கவலையில்ல:

இந்நிலையில் 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியாவிடம் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தாலும் கவலைப்பட போவதில்லை என்று இங்கிலாந்து துவக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக விளையாடி சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பி ஃபைனலில் இந்தியாவையே தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் டக்கெட் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இங்கே சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்ற ஒரு விஷயத்திற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒருவேளை 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றாலும் அவர்களை சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் தோற்கடிக்கும் வரை நாங்கள் கவலைப்பட மாட்டோம்”

- Advertisement -

ஃபைனல் முக்கியம்:

“இவை அனைத்தும் சரியான நேரத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவதைப் பற்றியதாகும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றியை நெருக்கமாக நெருங்கினோம். அதனால் இத்தொடரில் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எப்போதும் எடுத்துக் கொள்கிறோம். நன்றாக விளையாடும் வரை 65 ரன்கள் மட்டுமே எடுப்பதற்காக மட்டும் இங்கே இல்லை என்றாலும் நான் எதையும் மாற்றப் போவதில்லை”

இதையும் படிங்க: இதை க்ளிக் பண்ணா இந்தியாவுக்கே சாம்பியன்ஸ் டிராபி.. சச்சினை முந்திய ரோஹித்தை.. வாழ்த்திய அசாருதீன்

“ஃலெப்ட் ஆர்ம் ஸ்பின்னருக்கு எதிராக சிக்ஸர் அடியுங்கள் என்ற வகையில் எங்களுடைய பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் எதுவும் வற்புறுத்தலாக சொல்வதில்லை. எனவே நாங்கள் பயிற்சி எடுக்கும் விஷயங்களை களத்திலும் பின்பற்றி வருகிறோம். எங்களுடைய ஆட்டம் பற்றி அணிக்குள் எந்தப் புகாருமில்லை” என்று கூறினார்.

- Advertisement -