ரஹானேவின் துணைக்கேப்டன் பதவியை பறிக்க இதுவே காரணம் – பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச்

Rahane
Advertisement

இந்திய அணி இவ்வார இறுதியில் தென் ஆபிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் பங்கேற்கும் இந்திய அணியானது அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Rahane

அதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக துணை கேப்டன் ரகானேவின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் ஒரு வீரராகவே ரஹானே தொடர்கிறார். இப்படி ரஹானேவின் துணை கேப்டன் பதவியை திடீரென பறித்ததற்கு பின்னால் பிசிசிஐ ஒரு மறைமுக திட்டத்தை வைத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிகுந்த தடுமாற்றத்துடன் விளையாடி வரும் ரஹானே இனி அணிக்கு தேவையில்லை என்ற கருத்துக்கள் அதிக அளவு எழுந்துள்ளதால் அவரது இடம் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. மேலும் ரஹானே துணைக்கேப்டன் பதவியில் இருப்பதனாலேயே அவரை அணியில் இருந்து நீக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கவும் அந்தப் பதவியே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Rahane

இதன் காரணமாக தற்போது ரஹானேவை துணை கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கி உள்ளது. அது மட்டுமின்றி இனியும் அவர் மோசமான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் அவரை அணியில் இருந்து வெளியேற்றவே முதல் கட்டமாக அவரது இந்த பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் போன்ற சிறப்பான வீரர்கள் மிடில் ஆர்டரில் இடம் கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்தது யாருடைய முடிவு தெரியுமா ? – விவரம் இதோ

இதனாலும் ரஹானேவின் இடத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. இனி வரும் தொடர்களில் தொடர்ச்சியாக ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் அனுபவ வீரர்களாக இருந்தாலும் அவர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement