ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்தது யாருடைய முடிவு தெரியுமா ? – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் முடிவடைந்ததை அடுத்து தென்ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ரோஹித் டி20 கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதை தொடர்ந்து தற்போது அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியின் கேப்டன் விராட் கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

rohith

- Advertisement -

மேலும் இதுகுறித்து வெளியான அறிவிப்பில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே விராத் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ரோகித் சர்மாவின் நியமனம் குறித்தும் பல தகவல்கள் உலா வருகின்றன. இது குறித்து அண்மையில் பேசிய பி.சி.சி.ஐ தலைவர் கங்குலியும் விராத் கோலியின் பதவி நீக்கம் குறித்து தெளிவான கருத்தினை அளித்திருந்தார். அதன்படி ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஒரே ஒரு வீரர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தினாலேயே ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

Shastri

இந்நிலையில் பிசிசிஐ சார்பில் வெளியான ஒரு முக்கிய தகவலின் படி ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க “ஆல் இந்தியா சீனியர் செலக்சன் கமிட்டி குழு” தான் முடிவு செய்ததாகவும், அவர்களே ரோகித் சர்மாவை கேப்டனாக முடிவுசெய்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் பயமின்றி விளையாடும் 3 இளம்வீரர்கள் இவர்கள் தான் – ரவி சாஸ்திரி பாராட்டு

அதன்படி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரே நபர் கேப்டனாக இருந்தால் மட்டுமே அடுத்து வரும் இரண்டு உலக கோப்பைகளை நாம் சரியாக அணுக முடியும் என்கிற காரணத்தினால் டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக இருக்கும் ரோஹித்தை ஒருநாள் போட்டிக்கும் அவர்கள் நியமிக்க முடிவு செய்ததாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement