இந்திய அணியில் பயமின்றி விளையாடும் 3 இளம்வீரர்கள் இவர்கள் தான் – ரவி சாஸ்திரி பாராட்டு

Shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ரவிசாஸ்திரி நடைபெற்று முடிந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும் அவரது பதவி காலம் நிறைவடைந்ததால் அவர் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். ரவி சாஸ்திரியின் பதவி காலத்தில் இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அவரது பயிற்சி காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாட்டை அளித்திருந்தாலும் ஐசிசி கோப்பைகளை தவறவிட்டது மட்டுமே ஒரே குறையாக இருந்தது.

Shastri

- Advertisement -

அதுமட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கான நிறைய இளம் வீரர்களும் இவரது பயிற்சியின் கீழ் வெளிச்சத்திற்கு வந்து தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தான் பயிற்சி அளித்த போது தன்னை கவர்ந்த 3 இளம் வீரர்கள் குறித்து ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். மேலும் அந்த மூன்று வீரர்களும் பயமின்றி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

பும்ரா, சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய மூவருமே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இளம் வீரர்களாக அவர்கள் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பெரிய அணிகளுக்கு எதிராகவும் தங்களது பயமற்ற விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். நிச்சயம் அடுத்த தலைமுறை வீரர்களாக இவர்கள் 3 பேரும் இந்திய அணியில் திகழ்வார்கள். பும்ரா தற்போது இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக இருக்கிறார்.

player

அதேபோன்று தோனிக்கு அடுத்து இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக பண்ட் இருக்கிறார். மேலும் தற்போது டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இருக்கும் சுப்மன் கில் பெரிய அணிகளுக்கு எதிராக களமிறங்கிய விளையாடுகிறார். இவர்கள் மூவருமே இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடர் எப்போதுமே வீரர்களின் வளர்ச்சியில் பெரிய பங்கினை வகிக்கிறது என்று நான் எப்போதும் கூறுவது உண்டு.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரிட்டயர்டு ஆகப்போகிறாரா ஜடேஜா ? – காயத்தினால் ஏற்பட்ட சோகம்

அந்த வகையில் இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் போது சர்வதேச அளவில் விளையாடும் பெரிய வீரர்களுடன் கலந்து விளையாடுவதால் அவர்களுக்கு நல்ல முதிர்ச்சி ஐபிஎல் தொடரின்போது கிடைக்கிறது. மேலும் தற்போதுள்ள இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரின் போதே பெரிய பெரிய வீரர்களை சந்திப்பதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement