டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரிட்டயர்டு ஆகப்போகிறாரா ஜடேஜா ? – காயத்தினால் ஏற்பட்ட சோகம்

Jadeja-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா இரண்டாவது போட்டியின்போது காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் போனார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தற்போது ஜடேஜாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Jadeja

- Advertisement -

ஏனெனில் ஜடேஜாவிற்கு ஏற்பட்டுள்ள காயமானது தற்போது சீரியஸாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கும் ஜடேஜா நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை எந்த வகையான கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக 33 வயதாகும் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜடேஜாவால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நினைக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Jadeja 1

இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 17 அரைச் சதங்களுடன் 2195 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சிலும் 232 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆப்ரேஷன் செய்து கொள்ளவிருக்கும் ஜடேஜா கிரிக்கெட் களத்தை விட்டு நான்கு முதல் ஆறு மாதங்கள் விலகியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய – முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடர் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான தொடரையும் அவர் தவறவிட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அடுத்த ஐபிஎல் தொடருக்கு சென்னை அணியின் முதல் வீரராக வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டியின்போது தான் களத்திற்கு திரும்புவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement