IND vs ZIM : அவசர அவசரமா டீம்ல சேர்த்து கே.எல் ராகுலை கேப்டனாக்கிய பி.சி.சி.ஐ – என்ன காரணம்?

KL-Rahul
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் துவக்க வீரரான கே.எல் ராகுல் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்காமல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்ட வேளையில் கே.எல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது. அதன் காரணமாக ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட கே.எல் ராகுல் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்க தொடர், அயர்லாந்து தொடர், இங்கிலாந்து தொடர் என அடுத்தடுத்து முக்கிய தொடர்களை தவற விட்டார்.

kl rahul

- Advertisement -

அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்ட வேளையில் கடைசி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரையும் அவர் தவற விட்டார். இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பைத் தொடர் மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்நிலையில் தற்போது முழு உடற்தகுதி பெற்ற கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைந்து மட்டுமின்றி துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்ட வேளையில் நேற்று திடீரென பிசிசிஐ இந்த ஜிம்பாப்வே தொடரில் ராகுலும் இணைகிறார் என்று ஒரு தகவலை வெளியிட்டது.

Rahul-1

அதோடு அவர் இந்த ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார் என்றும் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருக்கும் வேளையில் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கும், இந்த தொடரில் விளையாடுவதற்கான நிர்ப்பந்தமும் ஒன்று உள்ளது. அந்த வகையில் காயம் காரணமாக கடந்த பல மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் நேரடியாக அணியில் தேர்வு செய்யப்பட்டது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதோடு நேரடியாக அவர் ஆசிய கோப்பையில் மட்டும் எவ்வாறு சிறப்பாக விளையாட முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இவ்வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஜிம்பாப்வே தொடரிலேயே அவர் விளையாட ஆரம்பித்து விட்டால் நிச்சயம் அவர் மீண்டும் பார்மை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பை அணியில் இருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர். எதற்கு இந்த முடிவு? – விவரம் இதோ

அதோடு ஜிம்பாப்வே தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் அதே நம்பிக்கையுடன் ஆசிய கோப்பையிலும் விளையாடுவார் என்பதன் காரணமாகவே தற்போது அவசர அவசரமாக அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டது மட்டுமின்றி கேப்டனாகவும் மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement