மும்பை அணியில் இருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர். எதற்கு இந்த முடிவு? – விவரம் இதோ

Arjun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இளம் வயது முதலே கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் காரணமாக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் அறிமுகமான அவர் கடந்த ஆண்டு மும்பை அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகமாகினார். ஆனாலும் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Arjun-Tendulkar

- Advertisement -

அடுத்ததாக அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காக சில சீசன்கள் நெட் பவுலராக இருந்த அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

ஆனால் அந்த சீசனில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கிலும் சற்று கை கொடுக்கக் கூடிய ஒரு ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார். இந்நிலையில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்த அவர் தற்போது மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

arjun tendulkar

மேலும் அண்டை மாநிலமான கோவா அணிக்காக அவர் விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காக மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்று கேட்டும் அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அவர் இடம் பெற்றிருந்தாலும் அதிகப்படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைப்பதில்லை.

- Advertisement -

அதன் காரணமாக வேறொரு மாநிலத்திற்கு செல்லும் பட்சத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதன் காரணமாகவே இந்த முடிவை அர்ஜுன் டெண்டுல்கர் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அர்ஜுனின் இந்த முடிவு குறித்து தகவல் வெளியிட்டுள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் :

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டில் அடுத்த விரேந்திர சேவாக்காக வந்திருக்க வேண்டிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

நீண்ட நேரம் மைதானத்தில் இருந்து அர்ஜுன் விளையாடுவது முக்கியம். அணி மாறுவதன் மூலம் நிறைய போட்டிகள் அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். அவரது அடுத்த கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறார் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement