இந்திய கிரிக்கெட்டில் அடுத்த விரேந்திர சேவாக்காக வந்திருக்க வேண்டிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Yusuf
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் எப்படி பந்து போட்டாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் முதல் பந்திலிருந்தே சரவெடியாக பேட்டிங் செய்வது தனி திறமையாகும். அதிலும் இந்த நவீன கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளிலும் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியமானதாகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கை கூறலாம். பந்து வீச்சாளர்கள் செட்டாவதற்கு முன்பாகவே அவர்களுக்கு கருணை காட்டாமல் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்கவிடும் திறமை பெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் பொறுமையை காட்டாமல் ராக்கெட் வேகத்தில் ரன்களை சேர்த்து ரசிகர்களை விரும்பிப் பார்க்க வைத்தவர்.

- Advertisement -

“எனக்கு டிஃபன்ஸ் ஆடத்தெரியாது” என்பது போல் இந்திய கிரிக்கெட்டில் தமிழகத்தின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்க்கு அடுத்தபடியாக அவரைவிட அதிரடியாக விளையாடிய வீரராக போற்றபடும் சேவாக் அவரே பொறுமையாக விளையாட நினைத்தாலும் அவரின் கை கால்கள் விடாது எனக்கூறலாம். 1999 – 2013 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த தொடக்க வீரராக எதிரணிகளை வெளுத்து வாங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்களை அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அடுத்த சேவாக்:
தற்போதைய நவீன கிரிக்கெட்டில் அவரின் அதிரடியை பின்பற்ற வேண்டிய நிலைமை அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் சில வீரர்கள் அடுத்த சேவாக் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு ஆரம்பத்தில் அதிரடியான செயல்பட்டனர். ஆனால் ஒரே சூரியன் ஒரே சேவாக் என்பது போல் பல்வேறு காரணங்களுக்காக நம்பிக்கை கொடுத்தாலும் அவரின் வளர்ச்சியில் பாதி கூட எட்டாத சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

uthappa

5. ராபின் உத்தப்பா: கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தனது அறிமுக போட்டியிலேயே 86 ரன்கள் விளாசி அடுத்த சில போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 70 (41) ரன்களை அதிரடியாக எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றார். இருப்பினும் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாட தவறிய அவர் அதனால் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பையும் தவற விட்டு கடந்த 2015க்குப்பின் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை மொத்தமாக தவறவிட்டார்.

- Advertisement -

அசால்ட்டாக பவுண்டரிகளை பறக்கவிடும் அவரின் பேட்டிங் ஸ்டைல் சேவாக் போன்ற அதிரடி வீரராக பெரிய அளவில் விளையாடுவார் என்று நம்பிக்கை கொடுத்தாலும் அதை அவர் சிறப்பாக பயன்படுத்தவில்லை என்றே கூறலாம். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டி வரும் அவர் இதுவரை 4952 ரன்களை 130.35 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து விளையாடி வருகிறார்.

4. அம்பத்தி ராயுடு: ஆந்திராவைச் சேர்ந்த இவர் 2014இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 121 ரன்களை அடித்த தருணமும் நியூசிலாந்துக்கு எதிராக 2019இல் வெலிங்டனில் 90 ரன்களை குவித்த தருணமும் அவரின் அதிரடி பேட்டிங் திறமையைக் காட்டியது. அதிலும் 2018 வாக்கில் உச்சகட்ட பார்மில் இருந்த அவர் 2019 உலகக் கோப்பையில் விளையாட தகுதியானவராக இருந்தபோதிலும் நியாயமில்லாமல் தேர்வுக்குழு கழற்றி விட்டது.

- Advertisement -

அதனால் மனமுடைந்து ட்வீட் போட்டு அவரை பழிவாங்க நினைத்த தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டதால் 33 வயதிலேயே ஓய்வு பெற்றார். அதிரடியாக விளையாடும் திறமை பெற்றிருக்கும் இவர் சேவாக் போல் வருவதற்கு தொடர்ச்சியாக அதை செயல்படுத்த தவறியதே காரணமாகும். ஐபிஎல் தொடரிலும் ஒருநாள் அதிரடி காட்டும் அவர் மறுநாள் சொற்ப ரன்களில் அவுட்டாவதே 188 போட்டிகளில் 4000 மேற்பட்ட ரன்களை எடுத்த போதிலும் 29.10 என்ற சுமாரான சராசரியும் 127.12 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருக்க காரணமாகும்.

Dinesh Karthik vs RSA

3. தினேஷ் கார்த்திக்: 2004இல் அறிமுகமாகி தோனி இருந்ததால் பெருமளவு வாய்ப்பு பெறாத இவர் தற்போது 37 வயதில் கடைசி நேரங்களில் களமிறங்கி மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விடுகிறார் என்பதை வைத்தே அடுத்த சேவாக்காக வந்திருக்க வேண்டியவர் என்று தாராளமாக கூறலாம். ஆனால் 2007இல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தவிர ஆரம்ப காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் இவர் சுமாராகவே செயல்பட்டதாலேயே தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறவில்லை.

- Advertisement -

இருப்பினும் கடந்த 2018இல் இலங்கையில் நடந்த நிதியாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற்று கொடுத்தது முதல் ப்ரம்மாண்ட எழுச்சி கண்டுள்ள இவர் மிகவும் தாமதமாக சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளார்.

Manish-Pandey

2. மனிஷ் பாண்டே: ஐபிஎல் தொடரில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவர் 2009இல் 19 வயதில் 73 பந்துகளில் 114* ரன்கள் விளாசி தனது அதிரடி திறமையை வெளிப்படுத்தியதை யாரும் மறக்க முடியாது. அதேபோல் 2014 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 94 (50) ரன்கள் குவித்து கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் அடித்த சதம், 2016இல் செஞ்சூரியனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அடித்த 79* (48) ரன்களை தவிர்த்து இந்தியாவுக்காக பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. அதிலும் ஒரு கட்டத்தில் சேவாக் போன்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் மெதுவாக விளையாடுவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைகிறது.

Yusuf

1. யூசுப் பதான்: ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008இல் 37 பந்துகளில் அடித்த சதம் உட்பட 435 ரன்களை 179.01 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய இவர் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்யும் இளம் வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்ற இவர் 2010இல் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 123 (96) ரன்களை விளாசி இந்தியா 316 ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற உதவினார்.

அதேபோல் செஞ்சூரியனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தெறிக்கவிட்ட 105 (70) ரன்களையும் மறக்க முடியாது. அதனால் 2011 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்திருந்த இவர் சேவாக் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்பின் பார்மை இழந்து இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலிருந்து வெகுதூரம் சென்று விட்டார்.

Advertisement