என்னதான் இருந்தாலும் இவ்ளோ அலட்சியமா இருந்திருக்க கூடாது. ஜடேஜாவின் மீது – பி.சி.சி.ஐ அதிருப்தி

Ravindra-Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக இறுதி நேரத்தில் சென்னை அணியை விட்டு வெளியேறிய ரவீந்திர ஜடேஜா அதன் பின்னர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தனது உடற்பகுதியை மேம்படுத்திகொண்டு மீண்டும் இந்திய அணிக்கு சில மாதங்கள் கழித்து திரும்பினார். அப்படி திரும்பிய ஜடேஜா நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் ஹாங்காங் அணிக்கு எதிராக போட்டியில் விளையாடும் போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது.

Ravindra Jadeja

- Advertisement -

அதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஜடேஜா பாதியிலேயே வெளியேறினார். மேலும் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று மருத்துவ குழுவினர் கூறிவிட்டதால் அணியில் இருந்து வெளியேறிய ஜடேஜா தற்போது அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் : அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. எனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். மேலும் கூடிய விரைவில் நான் உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்டு விரைவில் கிரிக்கெட் விளையாட களத்திற்கு திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஜடேஜாவின் இந்த காயம் குணமடைந்து மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட சுமார் மூன்று மாதங்களும் ஆகும் என்று கூறப்படுகிறது.

Ravindra Jadeja IND vs ENg

அதனால் அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலிருந்தும் விலகுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் ஜடேஜாவின் இந்த காயம் பிசிசிஐ-யை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டதாவது : ஜடேஜாவின் காயத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை.

- Advertisement -

ஏனெனில் அவர் சாகச செயல்களை செய்யும் போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் பொறுப்பேற்ற முறையில் நடந்து கொண்டார். ஜடேஜாவின் நடவடிக்கை சுத்தமாக எங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று நேரடியாக தெரிவித்துள்ளது. பிசிசிஐ அப்படி கூற காரணம் யாதெனில் : ஜடேஜா போட்டியின் போதோ அல்லது பயிற்சியின்போதோ காயம் அடையவில்லை.

இதையும் படிங்க : விராட் கோலியை போல் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் சதமடிக்க முடியாமல் தடுமாறிய 3 வீரர்களின் பட்டியல்

அவர் ஆசியக்கோப்பை தொடரின் இடையே கிடைத்த ஓய்வு நாளில் கடற்கரையில் சாகச விளையாட்டில் ஈடுபடும்போது அவர் தவறி விழுந்து இந்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனாலே பி.சி.சி.ஐ அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது. மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தும் திறமை உடைய ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.

Advertisement