விராட் கோலியை போல் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் சதமடிக்க முடியாமல் தடுமாறிய 3 வீரர்களின் பட்டியல்

Sachin Virat Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களுக்கு நாட்டுக்காக வெற்றிகளை பெற்று கொடுப்பதை இலக்காக வைத்திருப்பார்கள். குறிப்பாக ரன்களை குவிக்க வேண்டிய பேட்ஸ்மேன்கள் எப்படியாவது சதமடித்து உலக அரங்கில் தங்களது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் 0 ரன்களில் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது போராட்டத்தை துவங்குவார்கள். அதில் ஒரு கட்டத்தில் வெற்றியை காணும் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய சதத்தால் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார்கள்கள்.

அதனால் அவர்கள் களமிறங்கும் போதெல்லாம் சதமடிப்பார்களா என்று அனைவரும் எதிர்பார்க்கும் போது அவர்களும் மனிதர்கள் தானே என்ற வகையில் சில சமயங்களில் தடுமாறும் பேட்ஸ்மேன்கள் 3 இலக்க ரன்களை தொடுவதற்கு தடுமாறுவார்கள். அதிலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காமல் போனால் அதை தொடுவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும்.

- Advertisement -

அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் 70 சதங்களை விளாசி 33 வயதிலேயே சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்த ஜாம்பவானாக சாதனை படைத்தார். அதனால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடிப்பார் என்று கருதப்பட்ட அவர் “யார் கண் பட்டதோ” என்பதைப் போல் 2019க்குப்பின் சுமார் 3 வருடங்கள் 71வது சதத்தை அடிக்க முடியாமல் தவித்தார்.

அதிகப்படியான இடைவெளி:
அதனால் அதுவரை பெற்றுக்கொடுத்த வெற்றிகளை மறந்த நிறைய முன்னாள் வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்குமாறு போர்க்கொடி உயர்த்தினர். இருப்பினும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் விளையாடி வந்த அவர் ஒரு வழியாக 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து அடம்பிடித்த 71வது சதத்தையும் விளாசினார். ஆனால் அதை அடிப்பதற்கு 1020 நாட்களை எடுத்துக் கொண்டு அவரைப் போல் வரலாற்றில் அதிகப்படியான இடைவெளி எடுத்துக் கொண்ட 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. ஆடம் பரோரே: 90களில் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பராக வலம் வந்த இவர் 78 டெஸ்ட் மற்றும் 179 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதில் 1995இல் கிரிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்கடுத்த சதத்தை அடிக்க முடியாமல் 6 வருடங்கள் திணறினார்.

அதற்கிடையே 57 போட்டிகளில் விடாமல் முயற்சித்த அவர் ஒரு வழியாக கடந்த 2001இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் நகரில் 2வது சதத்தை அடித்து நிம்மதியடைந்தார். ஆனால் அதுவே அவருடைய கடைசி சதமாகவும் அமைந்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதத்திற்கு இடையே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற வித்தியாசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

2. ஆண்டி பிளவர்: 90களில் ஜிம்பாப்வே அணி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் டாப் அணிகளை தோற்கடிக்கும் வலுவான அணியாக திகழ்ந்ததற்கு பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய இவர் 1992 உலகக் கோப்பையில் முதல் முறையாக சதமடித்திருந்தார்.

ஆனால் அதற்கடுத்த சதத்தை அடிப்பதற்கு சுமார் 8 வருடங்கள் திண்டாடிய அவர் 148 போட்டிகள் கழித்து ஒரு வழியாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக சதமடித்தார். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதத்திற்கு இடையே அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

1. சச்சின் டெண்டுல்கர்: சதங்களை பொழுதுபோக்கிற்காக அடித்து 100 சதங்களை விளாசி உலக சாதனை படைத்த இவர் தனது முதல் சதத்தை கடந்த 1990இல் தன்னுடைய 17வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசி சாதனை படைத்தார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 1989இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடியதால் ரொம்பவே தடுமாறிய இவர் முதல் சதத்தை அடிப்பதற்கு 4 வருடங்கள் எடுத்துக் கொண்டார்.

கடைசி வரை தொடக்க வீரராக களமிறங்கிய பின்பே 79 போட்டிகள் கழித்து ஒருவழியாக ஒருநாள் கிரிக்கெட்டில் 1994இல் இலங்கைக்கு எதிராக சதமடித்த அவர் அதன்பின் ரன் மெஷினாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அதேபோல் 2011 உலகக்கோப்பையில் 98, 99 ஆகிய சதங்களை அடித்திருந்த அவர் 100வது சதத்தை அடிப்பதற்கு ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டு 2012இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஒரு வழியாக அடித்து உலக சாதனை படைத்தார்.

Advertisement