தோனியை ரிட்டையராக சொல்லுங்க, சிஎஸ்கே அணியின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ – முழுவிவரம் இதோ

Dhoni
- Advertisement -

கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட வளர்ச்சியை போலவே அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளனர். அதனால் தங்களது நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்த நினைக்கும் அவர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இந்த வருடம் புதிதாக உருவாக்கியுள்ள டி20 தொடர்களில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளன. அதில் சர்வதேச டி20 லீக் என்ற பெயரில் துபாயில் துவங்கப்பட்டுள்ள புதிய தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் 4 அணிகளை மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகள் வாங்கியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் துவங்கப்பட்டுள்ள டி20 தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் மும்பை, சென்னை, ஐதராபாத், லக்னோ, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக வாங்கியுள்ளன.

CSK Johannasburg CSA T20

இதை தொடர்ந்து இந்த அணிகளின் பெயர்கள் அதில் விளையாடும் வீரர்கள் போன்ற அம்சங்களில் அந்தந்த அணி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் மற்ற அணிகளுக்கு முன்னோடியாக “எம்ஐ எமிரேட்ஸ்” மற்றும் “எம்ஐ கேப் டவுன்” என புதிய பெயர்களை அறிவித்துள்ள மும்பை நிர்வாகம் தங்களுடைய எமிரேட்ஸ் அணிக்காக விளையாடும் 14 வீரர்களையும் வாங்கி அதை முதல் அணியாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் துபாயில் நடைபெறும் தொடரில் அணியை வாங்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தென் ஆப்ரிக்கா டி20 சேலஞ்ச் தொடரில் ஜோகன்னஸ்பர்க் நகரை மையப்படுத்திய அணியை வாங்கியுள்ளது.

- Advertisement -

ஜேஎஸ்கே அணி:
இருப்பினும் மும்பையை போல இதுவரை தங்களது அணிக்கு அதிகாரப்பூர்வ பெயரை அறிவிக்காத அந்த அணியின் பெயர் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தங்களது அணியின் துருப்பு சீட்டு வீரர்கள் தரமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அந்த அணி நிர்வாகம் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் பஃப் டு பிளேஸிஸை முதல் வீரராகவும் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் மொயின் அலியை 2வது வீரராகவும் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Faf

கடந்த பல வருடங்களாக சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டு ப்லஸ்ஸிஸை இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணி நிர்வாகம் கழட்டி விட்டதால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலைமை ஏற்பட்டது. அதனால் சென்னை ரசிகர்கள் கோபமடைந்த நிலையில் அவரது தலைமையில் பெங்களூரு நாக்-அவுட் சுற்றுக்கு சென்று அசத்தியது. அப்படி கையிலிருந்த நல்ல வீரரை கோட்டை விட்டதால் பாடத்தை கற்ற சென்னை இந்த தொடரில் அவரை வாங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஆலோசகராக தோனி:
அதேபோல் அந்த தொடரில் தங்களது அணி மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்கை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதைவிட சென்னை எனும் பிராண்ட் இன்று உலக அளவில் பிரபலமாக இருப்பதற்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி இந்த டி20 தொடரில் தங்களது அணியின் ஆலோசகராக செயல்பட வேண்டும் எனவும் சென்னை நிர்வாகம் விரும்புகிறது. அங்கு அவர் விளையாடவில்லை என்றாலும் ஆலோசகராக செயல்பட்டால் ஜோகன்னஸ்பர்க் அணி விளையாடும் போட்டிகளை நிறைய ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதே அதற்குக் காரணமாகும்.

MS Dhoni CSK

அதற்காக அனுமதி வழங்குமாறு பிசிசிஐக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்களை அனுமதிக்காமல் இருந்து வரும் பிசிசிஐ தோனியையும் அனுமதிக்க முடியாது என்று கறாராக தெரிவித்துவிட்டது. இந்தியாவுக்காக அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் இப்போதும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் அதிலிருந்து முழுமையாக ஓய்வு பெறாமல் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் எந்த வேலையையும் செய்ய அனுமதிக்க முடியாது என்று பிசிசிஐ கண்டிப்புடன் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: IND vs ZIM : தோற்றாலும் பரவால்ல, வலுவான இந்தியாவுக்கு கடும் சவால் கொடுப்போம் – ஜிம்பாப்வே கோச் எச்சரிக்கை

இது அப்படி பிசிசிஐ அதிகாரி அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்கள் உட்பட யாரையும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறாமல் எந்த வகையான வெளிநாட்டு டி20 தொடர்களிலும் அனுமதிப்பதில்லை என்று பிசிசிஐ தெளிவாக உள்ளது. ஒருவேளை அதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் பிசிசிஐ உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டால் மட்டுமே வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க முடியும். அந்த வகையில் இந்த தொடரில் தோனி பங்கேற்றால் அவர் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக விளையாட முடியாது. எனவே அவர் இந்தத் தொடரில் முதலில் முழுமையாக ஓய்வு பெற வேண்டும்” என்று கூறினார்.

Advertisement