IND vs AUS : பி.சி.சி.ஐ வெளியிட்ட வீடியோவால் வந்த குழப்பம் – முக்கிய வீரர் ஒருவர் அதில் எங்கும் இடம்பெறவில்லை

Practice
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது முக்கியமான டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் கே.எல் ராகுல் துவக்க வீரராக இடம் பெறுவாரா? அல்லது அவருக்கு பதிலாக சுப்மன் கில் இடம் பெறுவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் கே.எல் ராகுல் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதனால் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பினை மறுத்து அவருக்கு பதிலாக அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எந்த வீரர் துவக்க வீரராக இடம் பிடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோவினை இன்று பகிர்ந்துள்ள பிசிசிஐ அந்த விடீயோவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த பயிற்சி வீடியோவில் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று கே.எல் ராகுலும் தனது பேட்டிங் பயிற்சியினை மேற்கொள்கிறார்.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சுப்மன் கில் எந்த இடத்திலும் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெறவே இல்லை. இதன் காரணமாக அவருக்கு இந்த மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி வீடியோவில் கூட அவரை காண்பிக்காமல் விட்டால் எப்படி அவர் அணியில் இடம் பெறுவார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : எனக்காகவும் என் மனைவிக்காகவும் சென்னை மக்கள் காட்டிய அன்பை மறக்கவே முடியாது – வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் பேசிய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில் : கே.எல் ராகுல் தற்போது அழுத்தமான சூழ்நிலையை சந்தித்திருந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கி அவரை நல்ல பார்மிற்கு மீட்டுக் கொண்டு வருவோம் என்று டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement