எனக்காகவும் என் மனைவிக்காகவும் சென்னை மக்கள் காட்டிய அன்பை மறக்கவே முடியாது – வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

Wasim-Akram
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானான வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு புத்தகமாக தொகுத்து வழங்கியுள்ள வாசிம் அக்ரம் அந்த புத்தகத்தில் தனது மனைவி ஹீமா அக்ரம் மறைந்தது குறித்தும் சில உருக்கமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு ஹீமா அக்ரம் இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவரது 42-வது வயதில் மறைந்தார்.

wasim akram

- Advertisement -

இந்த நிகழ்வுகளை தொகுத்து அவர் எழுதியுள்ள “சுல்தான் தி மெமோயர்” என்ற புத்தகத்தில் சென்னையில் அவருக்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான தருணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை சிங்கப்பூரில் இருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளார். அப்போது லாகூரில் கிளம்பிய அந்த விமானம் சென்னையில் எரிவாயு நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் தன்னிடம் இந்தியாவிற்குரிய விசா தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மனைவிக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காகவே நாங்கள் இங்கு பயணித்து வந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அவருடைய மனைவியும் மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார்.

அப்போது என்ன செய்வது என்று அறியாமல் வாசிம் அக்ரம் அழுதுகொண்டே இருந்துள்ளார். அந்த நேரத்தில் எங்களிடம் இந்தியா விசா இல்லை என்றும் நாங்கள் இருவரும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மட்டுமே வைத்துள்ளோம் என்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இப்படி நாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது விமான நிலையத்தில் இருந்த சென்னை மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

- Advertisement -

மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்தவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்கத்துறை, குடியேற்ற அதிகாரிகள் என அனைவருமே என்னிடம் வந்து விசாவை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் உங்களது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அன்போடும் அக்கறையோடும் சொன்னார்கள். ஒரு கிரிக்கெட் வீரராகவும், சரி ஒரு மனிதராகவும் சரி என் வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத சம்பவம் அது.

இதையும் படிங்க : ஜடேஜா நம்பர் 1 ஆல்ரவுண்டராக மாற என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? – ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரசிய தகவல்

சென்னை மக்களும் அங்கிருந்தவர்களும் என்மீது அன்று காண்பித்த அக்கறையை நான் என்றென்றும் மறக்கமாட்டேன் என்று இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு தன் மனைவி ஹீமா அக்ரம் மாரடைப்பால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தான் காலமானார் என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement