எல்லாத்தையும் முடிச்சுக்குவோம், ரோஹித்தை விட்டு வேறுபக்கம் மொத்தமாக திரும்பும் பிசிசிஐ – வெளியான அறிவிப்பு

Hardik Pandya 1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் பயணத்தை துவங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், அர்ஷிதீப் சிங் என ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் காலம் கடந்த சீனியர்களை கழற்றி விட்டு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர்.

INDia Hardik pandya

- Advertisement -

அதற்கு செவி சாயத்த பிசிசிஐ முதலில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவைக் கூண்டோடு நீக்கியதுடன் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவை புதிய நிரந்தர கேப்டனாக அறிவிக்கும் வேலைகளை துவங்கியுள்ளது. அத்துடன் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு தரமான கேப்டன்களை நியமிப்பதே புதிதாக பொறுப்பேற்கும் தேர்வுக்குழுவின் முதல் வேலையாக இருக்கும் என்றும் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது பிசிசிஐ அதிருப்தியில் இருப்பது தெளிவாக தெரிய வந்தது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு கடைசியாக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் வாய்பளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஏனெனில் 2017 – 2021 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி இருதரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்பட்டாலும் உலகக் கோப்பையை வாங்கி தரவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பையை கூட வாங்க முடியாமல் தவித்ததால் கேப்டன்ஷிப் ராசியில்லாத விராட் கோலி இருக்கும் வரை இந்தியா உலகக்கோப்பையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தன.

BCCI-and-Rohit

மொத்தமா முடிச்சுக்கலாம்:
அதே சமயம் 5 ஐபிஎல் கோப்பைகளை அசால்ட்டாக வென்ற ரோகித் சர்மாவை டி20 கேப்டனாக நியமிக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்தன. அதனால் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பிசிசிஐ பறித்ததால் மனமுடைந்த அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் பின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்றாலும் இந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 அழுத்தமான முக்கிய தொடர்களில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

அதைவிட ஃபிட்டாக இல்லாத அவர் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுப்பதால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதனால் இதற்கு விராட் கோலியே பரவாயில்லை என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நிலையில் பிசிசிஐயும் 35 வயதை கடந்து விட்ட ரோஹித் சர்மா மீது அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அடுத்த டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாண்டியாவிடம் 2023 உலக கோப்பைக்குப்பின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியையும் ஒப்படைப்பதற்கான வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Hardik Pandya

இது பற்றி பாண்டியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கும் மூத்த பிசிசி அதிகாரி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இந்த புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இது பற்றி பாண்டியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது பற்றி முடிவெடுப்பதற்காக அவர் சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். எனவே இப்போது வரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும் நாங்கள் அவரிடம் வெள்ளை பந்து கேப்டன்ஷிப் பதவியை முழுமையாக ஒப்படைப்பதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். அதன் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2019-க்குப்பின் விராட் கோலி, புஜாரா உட்பட எங்களது சரிவுக்கு அதுதான் காரணம் – ரகானே சொல்லும் காரணம் என்ன?

இதனால் 2023 உலக கோப்பையுடன் ரோகித் சர்மாவின் இந்திய கேப்டன்ஷிப் பயணம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே பேட்டிங்கிலும் தடுமாறும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் டாட்டா காட்டுவதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோரை ஏற்கனவே பிசிசிஐ துணை கேப்டனாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement