2019-க்குப்பின் விராட் கோலி, புஜாரா உட்பட எங்களது சரிவுக்கு அதுதான் காரணம் – ரகானே சொல்லும் காரணம் என்ன?

Rahane
- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் டிசம்பர் 20ஆம் தேதியன்று துவங்கிய 26வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதின. எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அதிரடியாக செயல்பட்டு 651/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக யசஸ்வி ஜெய்ஸ்வால் 162, சூரியகுமார் யாதவ் 90, சர்ப்ராஸ் கான் 126* என இளம் வீரர்கள் பெரிய ரன்களை குவித்த நிலையில் கேப்டன் அஜிங்கிய ரகானே தனது அனுபவத்தை காட்டி அற்புதமாக பேட்டிங் செய்து 26 பவுண்டரி 3 சிக்சருடன் இரட்டை சதமடித்து 204 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கடந்த 2011 முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் இவர் 2015 உலக கோப்பைக்குப் பின் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வாய்ப்பை இழந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டனாக அசத்தினார். குறிப்பாக 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்திய அணியை விராட் கோலி நாடு திரும்பிய பின் கேப்டனாக முன்னின்று அபாரமாக வழி நடத்திய அவர் 2 – 1 (4) என்ற கணக்கில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

காரணமே வேற:
இருப்பினும் அந்த தொடருக்குப்பின் பார்மை இழந்து சதமடிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருடன் அதே தொடரில் நீக்கப்பட்ட மற்றொரு சீனியர் நட்சத்திரம் புஜாரா கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியில் ஏற்கனவே கம்பேக் கொடுத்துள்ள நிலையில் இவரும் இரட்டை சதமடித்துள்ளதால் விரைவில் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2019க்குப்பின் தாமும் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய மூவரும் தடுமாறுவதற்கு இந்தியாவில் அமைக்கப்பட்டிருந்த கடினமான பிட்ச்சுகள் தான் காரணம் என்று ரகானே வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.

Rahane

இருப்பினும் அதை ஒரு சாக்காக சொல்லவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எனது பேட்டிங் ஸ்டைலால் சராசரி குறைந்து போனதில் எந்த தவறுமில்லை. நாங்கள் கடந்த 3 வருடங்களாக இந்தியாவில் விளையாடி வருகிறோம். இந்தியாவுக்காக 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் விளையாடும் வீரர்களை பார்க்கும் போது இங்குள்ள விக்கெட்டால் (பிட்ச்) அவர்களது சராசரி குறைந்து போனது. குறிப்பாக புஜ்ஜி (புஜாரா), விராட் மற்றும் என்னுடைய சராசரி குறைந்தது”

- Advertisement -

“அந்த காலகட்டங்களில் எங்களது பேட்டிங்கில் பெரிய அளவில் தவறுகள் இல்லை. அதற்காக நாங்கள் ஒவ்வொரு முறையும் பேட்டிங்கில் தவறு செய்ததாகவும் அர்த்தமில்லை. சில நேரங்களில் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் அதை ஒரு குறையாக சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் இந்தியாவில் அந்த காலங்களில் நாங்கள் விளையாடிய பிட்ச்கள் எப்படி இருந்தது என்பதை அனைவருமே பார்த்தார்கள்.

Rahane

பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரில் விளையாடும் போது உங்களுக்கு எப்போதுமே சவால் காத்திருக்கும். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு அது எளிதாகும். அது கடினமான பந்தின் காரணமாகும். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியேறும் போது நாம் எங்கே தவறு செய்தோம் என்று நினைக்கிறோம்”

இதையும் படிங்க : இதைவிட ஒரு மட்டமான முடிவை எடுக்கவே முடியாது. கேப்டன் கே.எல் ராகுலை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

“இந்த சமயத்தில் நான் என்னை யாருக்காகவும் எதற்காகவும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பொறுத்தவரை என் மீது நம்பிக்கை வைத்து நான் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும். அதே சமயம் இந்த வீழ்ச்சியால் நான் நம்பிக்கையை கைவிடவில்லை. இப்போதும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதை என்னுடைய கனவாகும். அதே சமயம் மும்பைக்காக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று கொடுக்க வேண்டும். அதில் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறினார்.

Advertisement