இதைவிட ஒரு மட்டமான முடிவை எடுக்கவே முடியாது. கேப்டன் கே.எல் ராகுலை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

KL-Rahul
Advertisement

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

IND-vs-BAN

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ளது. வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டது பெரிய அளவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங்கில் 40 ரன்களையும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்த அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருந்த ஜெய்தேவ் உனட்கட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை அணியில் இணைத்தது வரவேற்கக் கூடிய போன்று தான் என்றாலும் குல்தீப் யாதவை அணியிலிருந்து நீக்கியது முட்டாள்தனமான முடிவு என்று கேப்டன் கே.எல் ராகுலின் முடிவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Unadkat-and-Kuldeep

ஏனெனில் வங்கதேசத்தில் குறிப்பாக டாக்கா மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் அதிகமாக சாதகமாக இருக்கும். அதேவேளையில் முதல் போட்டியின் போது பந்துவீச்சில் அசத்திய குல்தீப் இந்த போட்டியிலும் அசத்தலாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை நீக்கி விட்டார்கள். ஆனால் முதல் போட்டியின் போது சுமாராக பந்துவீசிய அக்சர் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் தான் ரசிகர்கள் கே.எல் ராகுலை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

ஒருவேளை அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வினை உங்களால் நீக்க முடியவில்லை என்றால் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு உனட்கட்டிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் விட்டுவிட்டு சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதினை வென்ற ஒரு வீரருக்கு அடுத்த போட்டியிலேயே நிராகரிப்பு என்பது மோசமான ஒரு முடிவு என்று கிரிக்கெட் ரசிகர்கள் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒருவழியாக இந்திய அணியில் களமிறங்கிய ஜெயதேவ் உனட்கட் – 61 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை

அதோடு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கியது எப்படி எடுக்கப்பட்ட முடிவு என்று புரியவில்லை என்றும் ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை சமூகவலைத்தளத்தின் மூலம் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது/ ஒரு பக்கம் ஜெய்தேவ் உனட்கட் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிய குல்தீப் யாதவ் நீக்கப்பட்டது சற்று வருத்தமளிக்கும் விடயமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement