ஒருவழியாக இந்திய அணியில் களமிறங்கிய ஜெயதேவ் உனட்கட் – 61 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை

Jaydev Unadkat
Advertisement

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்தாலும் அடுத்ததாக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவர் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய இந்தியா டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் களமிறங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் 2 ஆச்சரியப்படும் மாற்றங்கள் ரசிகர்களுக்கு காத்திருந்தது.

IND-vs-BAN

முதலில் 22 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்து முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளும் 40 ரன்களும் குவித்து 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் சம்பந்தமின்றி அதிரடியாக நீக்கப்பட்டார். அதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் 12 வருடங்கள் கழித்து இத்தொடருக்காக ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியால் கடந்த 2010 ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய அவர் அறிமுகப் போட்டியில் சுமாராக செயல்பட்டதால் எஞ்சிய தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

சாதனை கம்பேக்:
அதன் பின் விதியை போல் கழற்றி விடப்பட்ட அவர் 2013 – 2018 வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெற்ற கணிசமான வாய்ப்புகளிலும் சுமாராக செயல்பட்டு ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவரின் இந்திய கேரியர் முடிந்து போனதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் 2019/20 சீசனில் அதிக விக்கெட்களை எடுத்து சௌராஷ்டிரா அணிக்கு கேப்டனாக முதல் ரஞ்சி கோப்பை வென்று கொடுத்தார். அத்துடன் 2022 விஜய் ஹசாரே கோப்பையையும் கேப்டனாக சௌராஷ்டிரா அணிக்கு வென்று கொடுத்த அவர் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் தேர்வுக்குழு தாமாக முன்வந்து வாய்ப்பு கொடுத்துள்ளது.

Unadkat

அதனால் 2010இல் 19 வயது இளம் வீரராக முதல் போட்டியில் விளையாடிய அவர் 12 வருடங்கள் மிகச்சரியாக 4389 நாட்கள் கழித்து 31 வயது அனுபவ வீரராக இந்தியாவுக்கு விளையாடுகிறார். குறிப்பாக அறிமுகப் போட்டியை 2010இல் விளையாடி விட்டு ஒரு தசாப்தம் கழித்து 2வது போட்டியில் விளையாடும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேரியரின் முதல் போட்டிக்கும் 2வது போட்டிக்கும் இடையே அதிக போட்டிகளை தவற விட்ட வீரர் என்ற இங்கிலாந்தின் லெஸ் ஜாக்சனின் 61 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜெயதேவ் உனட்கட் : 118 (2010 – 2022)*
2. லெஸ் ஜாக்சன் : 96 (1949 – 1961)
3. கேத் அண்ட்ரூ : 79 (1954 – 1963)
4. ப்ராட் ஹாக் : 78 (1996 – 2003)

- Advertisement -

மேலும் ஒட்டு மொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையே அதிக போட்டிகளை தவற விட்ட ஆசிய வீரர் என்ற பெயரையும் அவர் வாங்கியுள்ளார். அந்த பட்டியல்:
1. கெரத் பேட்டி (இங்கிலாந்து) : 142
2. ஜெயதேவ் உனட்கட் (இந்தியா) : 118*
3. மார்ட்டின் பிக்னல் (இங்கிலாந்து) : 114
4. பிளாய்ட் ரெய்பர் (வெஸ்ட் இண்டீஸ்) : 109
5. யூனிஸ் அஹமத் (பாகிஸ்தான்) : 104

unadkat

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் அதிக இடைவெளியை சந்தித்த 2வது இந்திய வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அந்த பட்டியல்:
1. லாலா அமர்நாத் : 12 வருடம் 129 நாட்கள் (1934 – 1946)
2. ஜெயதேவ் உனட்கட் : 12 வருடம் 2 நாட்கள் (2010 – 2022)*
3. டி ஹிண்டல்கர் : 9 வருடம் 357 நாட்கள் (1936 – 1946)

இதையும் படிங்க : ஒரு மேட்ச்ல அடிச்சுட்டு 5 மேட்ச் காலத்தை தள்ளும் ராகுலுக்கு பதில் அவருக்கு சான்ஸ் கொடுக்கலாம் – சபாகரீம் அதிரடி

அப்படி கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி தாமாக தேடி வரும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக திகழும் அவர் இந்த 2வது போட்டியில் 12 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்டையும் எடுத்து சாதித்து காட்டியுள்ளார்.

Advertisement