- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடுத்தடுத்த கேப்டன் பதவி மட்டுமல்ல.. சம்பள விடயத்திலும் சுப்மன் கில்லுக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் வீரர்களின் தகுதியின் அடிப்படையில் வருடாந்திர சம்பள பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டிற்கான சம்பள ஒப்பந்த பட்டியலை எதிர்வரும் டிசம்பர் 22-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அப்படி வெளியான தகவல் தான் தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சம்பளத்திலும் உச்சம் தொடப்போகும் சுப்மன் கில் :

ஏனெனில் இந்த புதிய சம்பள ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அதிகப்படியாக ஏ ப்ளஸ் கிரேடில் 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : கடந்த 2024-25 ஆண்டுகளில் ஏ ப்ளஸ் பிரிவில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய இருவர் மட்டுமே 7 கோடி சம்பளமாக பெற்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான சம்பள பட்டியலில் அவர்களுடன் இணைந்து சுப்மன் கில்லும் 7 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் எதிர்கால இந்திய அணியில் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடி வரும் வேளையில் ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வை அறிவித்துவிட்டு தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதனால் அவருக்கும் ஏ ப்ளஸ் பிரிவு சம்பள ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.

- Advertisement -

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கும் கில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு டி20 போட்டிகளுக்குமான கேப்டனாகவும் நியமிக்கப்பட இருக்கிறார். இதன் காரணமாகவே அவரின் சம்பள ஒப்பந்தத்தில் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணியின் மூன்று வகையான கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லுக்கு இப்படி தொடர்ச்சியாக பி.சி.சி.ஐ சலுகைகளை வழங்கி வருவது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா தப்பு பண்ணா யுவ்ராஜ் சிங் போன் பண்ணி இதைத்தான் செய்வார் – அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு எந்த சம்பள ஒப்பந்த பட்டியலில் இடம்பெறப் போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பும் இந்த அறிவிப்பு பிறகு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -