அபிஷேக் சர்மா தப்பு பண்ணா யுவ்ராஜ் சிங் போன் பண்ணி இதைத்தான் செய்வார் – அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி

Abhishek and Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா டி20 போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான துவக்க வீரருக்கான இடத்தினை உறுதி செய்துள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.

அபிஷேக் சர்மா மீது யுவ்ராஜ் சிங் உரிமையா கோபப்படுவார் :

இந்த தொடரின் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன் குவிக்க தடுமாறிய அவர் தற்போது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுவதற்காக தயாராக உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிஷேக் சர்மா இன்று அவருடைய சொந்த மாநிலத்தில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் மத்தியிலும் அவர் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் தந்தையும் சிறுவயது பயிற்சியாளருமான ராஜ்குமார் சர்மா அபிஷேக் சர்மாவை இவ்வளவு பெரிய வீரராக வளர்த்தெடுத்தது எந்தெந்த பயிற்சியாளர்கள்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் : அபிஷேக் சர்மா சிறு வயதில் 4 மணிக்கு எல்லாம் எழுந்து விடுவார்.

அதன் பின்னர் உடற்பயிற்சி, ரன்னிங், நீச்சல் என அனைத்தையும் தொடர்ச்சியாக செய்வார். மேலும் பஞ்சாப் அணியின் ஜூனியர் பயிற்சியாளரான அருண் பேடியிடம் பயிற்சி பெற்ற அவர் 11-12 வயதிலேயே எளிதாக சிக்ஸர்களை அடிக்கும் திறனையும் கற்றுக் கொண்டார். எப்போதெல்லாம் அவர் பெரிய பெரிய சிக்சர்களை அடிக்கிறாரோ அப்போதெல்லாம் அவரை அருண் பேடி பாராட்டுவார்.

- Advertisement -

அதன்பிறகு படிப்படியாக வளர்ந்த அவரை இந்திய ஏ அணியில் லக்ஷ்மனன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சிறப்பாக வடிவமைத்தனர். பின்னர் ஐபிஎல் தொடருக்கு அவர் நுழைந்த போது ரிக்கி பாண்டிங் மற்றும் பிரைன் லாரா ஆகியோரும் அவரை மேலும் மெருகேற்றினர். பின்னர் லாக் டவுனில் யுவராஜ் சிங் அவரை ஒருபடி மேலே சென்று மிகப்பெரிய பவர் ஹிட்டராக மாற்றினார். இப்படி பல்வேறு முன்னாள் ஜாம்பவான்களின் வழிகாட்டுதலால் அவர் இன்று பெரிய வீரராக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவிடம் தொடர்ந்து பிரையன் லாரா இதை சொல்லிகிட்டே இருக்காரு – அபிஷேக்கின் தந்தை அளித்த பேட்டி

சர்வதேச போட்டிகளில் அபிஷேக்சர்மா எப்போதெல்லாம் தவறு செய்கிறாரோ அப்போதெல்லாம் யுவராஜ் சிங் போன் செய்து அவரை திட்டுவார். இன்றளவும் கூட அபிஷேக் ஷர்மா ஏதாவது பேட்டிங்கில் தவறு செய்து விட்டால் நிச்சயம் அவரிடம் இருந்து போன் கால் வரும் அபிஷேக் சர்மாவை அவர் உரிமையுடன் கடிந்து கொள்வார் என அவரது தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement