இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு டி20 அணியின் புதிய துவக்க வீரராக இளம் இடதுகை அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா விளையாடி வருகிறார். அப்படி விளையாடி வரும் அவர் தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான துவக்க வீரராகவும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
அபிஷேக் சர்மாவிற்கு அறிவுரை கூறிய பிரையன் லாரா :
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அதிரடியாக விளையாடும் அவருக்கு விரைவில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் போன்ற பல்வேறு வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக அபிஷேக் ஷர்மா தற்போதைக்கு டி20 அணியின் துவக்க வீரராக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறார். ஆனாலும் விரைவில் அவரது திறனை மேம்படுத்திக்கொண்டு அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் விளையாட வேண்டும் என்பதை பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா அபிஷேக் சர்மாவை தொடர்ந்து சிவப்பு பந்திலும் அதிரடியாக விளையாடும் படியும் டெஸ்ட் போட்டிகளில் அவரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக அபிஷேக் சர்மாவின் தந்தை சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மாவிற்கு முதல் வெற்றியே சிவப்பு பந்தில் இருந்து வந்ததுதான். அதன்பிறகு தான் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டு போட்டிகளை தொடர்ச்சியாக விளையாடி தற்போது இந்திய அணியில் வாய்ப்பு பெற்று விளையாடி வருகிறார். லாரா எப்பொழுதுமே அபிஷேக் ஷர்மாவை அனைத்து வடிவ வீரராகவே பார்க்கிறார்.
இதையும் படிங்க : எனக்காக ரோஹித் ரிஸ்க் எடுத்தாரு.. கோலி என்னை வழி நடத்தினாரு.. சீனியர்கள் குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி
அதிலும் குறிப்பாக என் மகனுடன் நீண்ட நேரம் பேசும் அவர் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் சிவப்பு பந்திலும் ஆதிக்கம் செலுத்தி விளையாடும் படி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருவதாகவும் அபிஷேக் சர்மாவின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.



