டி20 கிரிக்கெட்டின் முக்கிய பொறுப்பிற்கு தோனியை அழைத்த பி.சி.சி.ஐ – தோனியும் சம்மதம் (அதிகாரபூர்வ தகவல்)

MS-Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஐசிசி கோப்பைகளை தவறவிட்டு வரும் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைவதற்காக சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு பொறுப்பினை தோனிக்கு பிசிசிஐ வழங்க இருப்பதாகவும் அதற்கு தோனியும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனைப் பற்றிய சுவாரசிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

IND-Team

- Advertisement -

அதன்படி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிர்வாகமாக இருக்கும் பிசிசிஐ தொடர்ச்சியாக இந்திய அணிக்கு பல்வேறு மேம்பாடுகளை செய்த போதிலும் இந்திய அணியால் கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி நடத்திவரும் உலக கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பதில் ஒரு பெரிய வருத்தத்தை சந்தித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையும் இந்திய அணி தவறவிட்டதால் அடுத்த உலக கோப்பையை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற நோக்கில் இந்திய அணியில் புதிய பல மாற்றங்களை கொண்டு வர தற்போது பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் மூன்று விதமான இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஒரே பயிற்சியாளர் என்பது இனி தேவையில்லை என்றும் விரைவில் தனித்தனியாக பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

dhoni mentor

அதேபோன்று ஒவ்வொரு ஃபார்மேட்டிற்கும் தகுந்தவாறு தனிப்பட்ட சில வீரர்களை அணியில் இணைத்து ஒவ்வொரு அணியும் தனித்தனியே தயார் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை டி20 கிரிக்கெட்டின் டைரக்டராக பணிநியமனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிசிசிஐ தரப்பில் வெளியான செய்தியின் படி : டி 20 கிரிக்கெட்டில் தோனிக்கு இருக்கும் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -

அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டாலும் மிக குறுகிய நாட்களே அவர் இந்திய அணிக்காக வேலை செய்ததால் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் இம்முறை அவருக்கு நாங்கள் வழங்க இருக்கும் இந்த “டைரக்டர் ஆப் கிரிக்கெட்” பதவி நிச்சயம் 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற உதவும் என்பதனால் இந்த முடிவை நாங்கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : கழட்டிவிடப்பட்ட பொல்லார்டுக்கு பதிலாக பலே ஆல்ரவுண்டரை தட்டி தூக்கவுள்ள – மும்பை இந்தியன்ஸ்

மேலும் தோனியிடமும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற இருக்கும் தோனி ஓய்வுக்கு பிறகு அந்த பதவி ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement