IPL 2022 : மெகா ஏலத்திற்கு முன் ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்கான புது ரூல்ஸை வெளியிட்ட – கிரிக்கெட் வாரியம்

Dhoni-3 IPL
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் 15-ஆவது ஐபிஎல் தொடரரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாடும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

csk 1

- Advertisement -

அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலமும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக கிரிக்கெட் வாரியம் ஒரு புதிய விதிமுறையை இந்த ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஐபிஎல் தொடரின் ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் 85 கோடி ரூபாய் செலவிடலாம் என்ற விதியை மாற்றி அடுத்த ஆண்டு அந்த தொகை அதிகரிக்கப்பட்டு 90 கோடி ரூபாய் வரை வீரர்களை வாங்க செலவிடலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

eng ipl

மேலும் இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் (3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டவர்) அல்லது (இரண்டு இந்தியர் இரண்டு வெளிநாட்டவர்) என எப்படி வேண்டுமானாலும் அணியின் விருப்பத்திற்கேற்ப தக்கவைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னை கேட்டா இந்திய அணியில் இந்த ஒரு மாற்றத்தை செய்ஞ்சி தான் ஆகனும் – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக புதிதாக சேர்ந்திருக்கும் இரண்டு அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement