என்னை கேட்டா இந்திய அணியில் இந்த ஒரு மாற்றத்தை செய்ஞ்சி தான் ஆகனும் – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கெதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியில் மாற்றம் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இந்திய அணியில் எந்த வித மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

varun 1

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 2-வது லீக் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பலரும் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை இந்திய அணியில் ஒரு மாற்றத்தை செய்யலாம் என்னை கேட்டால் நான் இந்திய அணியில் ஷர்துல் தாகூர்-யை சேர்க்க விரும்புகிறேன். ஷர்துல் தாகூர் அணியில் இருக்கும் பட்சத்தில் ஷமி அல்லது புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவரது வாய்ப்பு மறுக்கப்படும்.

thakur 1

அவர்கள் இருவரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. இருப்பினும் ஷர்துல் தாகூர் விளையாடினால் அது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். ஏனெனில் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட கூடியவர் தாகூர். அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் என்னை கேட்டால் நிச்சயம் அவர் இந்திய அணியில் தாகூர் விளையாட வேண்டும் என்றுதான் கூறுவேன் என தினேஷ் கார்த்திக் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருத்தரை மட்டும் குறை சொல்ல முடியாது. இன்னைக்கு இவர் நிச்சயம் ஆடுவாரு – விராட் கோலி உறுதி

மேலும் அஷ்வின் அணியில் விளையாடினாலும் நன்றாகத்தான் இருக்கும் என்றும் கூறினார். இன்றைய முக்கியமான லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement