ஒருத்தரை மட்டும் குறை சொல்ல முடியாது. இன்னைக்கு இவர் நிச்சயம் ஆடுவாரு – விராட் கோலி உறுதி

rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்ள இருக்கிறது. இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

NZvsIND

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் தோற்றதன் காரணமாக இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

ஹார்டிக் பாண்டியா நல்ல நிலைமையில் இருப்பதால் நிச்சயம் அவர் இன்று 1 அல்லது 2 ஓவர்கள் பந்து வீசுவார். கடந்த போட்டியின் போது 6-வது பந்துவீச்சாளர் தேவைப்படவில்லை இரண்டாவதாக நாம் பந்துவீசியதால் முதன்மை பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்தினோம். ஒருவேளை முதலில் பவுலிங் செய்து இருந்தால் ஆறாவது பந்துவீச்சாளரை பயன்படுத்தி இருக்கலாம். நிச்சயம் இந்த போட்டியில் பாண்டியா ஒரு சில ஓவர்களை வீசுவார்.

pandya

ஷர்துல் தூகூரும் எங்கள் திட்டத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். திறமை வாய்ந்த அவருக்கு நிச்சயம் மதிப்பு அதிகம் என்று விராட் கோலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு ஒருத்தரை மட்டும் குறை கூறுவது தவறு. அனைவருமே அந்த தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : நீ முடிஞ்சது பாத்துக்கோ. நாங்க செய்யப்போற சம்பவம் சிறப்பா இருக்கும் – நியூசி வீரருக்கு பதிலடி கொடுத்த கோலி

அதே போன்று நியூசிலாந்து அணியில் போல்ட் எவ்வாறு பந்துவீச போகிறார் ? அவரை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த திட்டத்தையும் வைத்துள்ளோம். நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று விராட் கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement