- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு 58 கோடி பரிசுத்தொகை.. ரோஹித், கம்பீர், அகர்கருக்கு எவ்வளவு? தனித்தனியே அறிவித்த செயலாளர்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் தோற்கடித்து 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்டது.

அத்துடன் 3 சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அந்த சாம்பியன்ஸ் டிராபியை 12 வருடங்கள் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த இந்திய அணிக்கு பிசிசிஐ 58 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. சொல்லப்போனால் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் சுமார் 20 கோடி ரூபாய் பரிசாக கொடுத்தது.

- Advertisement -

58 கோடி பரிசு:

ஆனால் தங்களுடைய அணிக்கு உலகின் பணக்கார வாரியமான பிசிசிஐ அதை விட சுமார் 3 மடங்கு அதிக பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த 58 கோடிகளில் யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்ற விவரத்தை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்திய அணியில் இருந்த 15 வீரர்கள் தலா 3 கோடி பரிசுத் தொகையை பெறுவார்கள். தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 3 கோடி பரிசுத் தொகையை பெறுவார். துணைப் பயிற்சியாளர்கள் அனைவரும் தலா 50 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார்கள். மீடியா மேனேஜர் மற்றும் தொடர்பு அதிகாரி தலா 25 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார்கள்”

- Advertisement -

தனித்தனி விவரங்கள்:

“தேர்வுக்குழுவினரும் பரிசுத் தொகையை பெறுவார்கள்” என்று கூறியுள்ளார். அவரது அறிவிப்பின் படி ரோகித் சர்மா முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த வாஷிங்டன் சுந்தர் வரை 15 இந்திய வீரர்கள் தலா 3 கோடியும், கௌதம் கம்பீர் 3 கோடியும் பரிசாக பெற உள்ளனர். அபிஷேக் நாயர், ரியான் டஸ்சேட், மோர்னே மோர்கெல், டி திலிப் ஆகிய துணைப் பயிற்சியாளர்கள் தலா 50 லட்சம் பரிசாக பெற உள்ளனர்.

இதையும் படிங்க: இந்த வருஷம் ஜாஸ் பட்லருக்கு இதான் நாங்க குடுக்கும் ரோல் – குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டி

கமலேஷ் ஜெயின், யோகேஷ் பார்மர் ஆகிய உடற்பயிற்சியாளர்கள், அணி மருத்துவர் ஆதித்யா தாப்தரே பந்தை எரியும் பயிற்சியாளர்களான ரகு, நுவான் உடனகே, சேட்டன் குமார், ராஜிவ் குமார், அருண் கணடே கண்டிஷனிங் பயிற்சியாளர் சோகம் தேசாய் ஆகியோர் தலா 50 லட்சம் பெறுவார்கள். தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் 30 லட்சம், துணை தேர்வாளர்கள் சுப்ரட்டோ பேனர்ஜி, அஜய் ரத்ரா, எஸ் சரத், எஸ்எஸ் தாஸ் தலா 25 லட்சம் பெறுவார்கள். இது போக ஐசிசி கொடுத்த 19.45 கோடிகளை 1,43,58,000 ரூபாய் வீதம் 15 வீரர்கள் மட்டும் பகிர்ந்து கொள்வார்கள் என்று சைக்கியா தெரிவித்துள்ளார்.

- Advertisement -