இந்த வருஷம் ஜாஸ் பட்லருக்கு இதான் நாங்க குடுக்கும் ரோல் – குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டி

Gill and Buttler
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணியாக அறிமுகமாகிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையில் அறிமுக ஆண்டிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அதற்கடுத்து 2023-ஆவது ஆண்டில் அதே பாண்டியாவின் தலைமையில் இறுதிப்போட்டி வரை சென்று சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்த வருஷம் ஜாஸ் பட்லரின் ரோல் இதுதான் : சுப்மன் கில்

அதன் பிறகு கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியா அந்த அணியில் இருந்து வெளியேறினார். அதன் காரணமாக புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் விளையாடியது. கடந்த வருடம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுமாராகவே சென்ற வேளையில் இந்த ஆண்டு அந்த அணி மீண்டும் பலமான அணியாக மாறியுள்ளதால் கோப்பையை குறிவைத்து தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் பல்வேறு நட்சத்திர வீரர்களை அந்த அணி வாங்கியுள்ளதால் நிச்சயம் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்ட விரிதிமான் சாஹா ஓய்வை அறிவித்து விட்டதால் தற்போது அந்த அணி புதிய விக்கெட் கீப்பரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 2025 ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் விக்கெட் கீப்பராக ஜாஸ் பட்லர் தான் செயல்படுவார் என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் உறுதி செய்துள்ளார். 2025 ஆம் ஆண்டிற்கான மெகா ஏலத்தில் 15 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து ஜாஸ் பட்லரை குஜராத் அணி விலைக்கு வாங்கியிருந்தது.

- Advertisement -

சில ஆண்டுகளாகவே விக்கெட் கீப்பிங் செய்யாமல் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்த ஜாஸ் பட்லர் இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் குஜராத் அணிக்கு விக்கெட் கீப்பராக விளையாடப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் :

இதையும் படிங்க : இந்திய அணி இங்கிலாந்து வரும் போது சேத்து வச்சி செய்வோம்.. எச்சரிக்கை விடுத்த – இங்கிலாந்து வீரர்

இந்த ஆண்டு எங்களது அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜாஸ் பட்லர் தான் இருக்கப் போகிறார். அவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தால் எங்களது அணியின் பிளேயிங் லெவனில் கூடுதலாக மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவரே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என சுப்மன் கில் கூறியுள்ளார்.

Advertisement