கேப்டன் பதிவில் இருந்து தூக்கியதற்கு பின்னர் விராட் கோலியை சமாதானம் செய்ய – பி.சி.சி.ஐ செய்துள்ள செயல்

BCCI
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் முக்கியமான ஐசிசி தொடர்களில் கோப்பையை இழந்ததன் காரணமாக மிகப்பெரும் அழுத்தத்தை கோலி சந்தித்தார். அதுமட்டுமின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் கேப்டனாக இருப்பதனால் பணிச்சுமை காரணமாக அவரது பேட்டிங் பார்மும் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் அவர் தனது டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று கோலி கூறியிருந்தாலும் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து விராட் கோலியின் கேப்டன் பதவியை பி.சி.சி.ஐ பறித்தது.

- Advertisement -

மேலும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்க்கு ரோஹித் சர்மாவும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலியும் அறிவிக்கப்பட்டனர். இதன் காரணமாக கோலியின் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக நீடிக்க விரும்பியும் அவரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து தற்போது பிசிசிஐ அவரை சமாதானம் செய்யும் வகையில் ஒரு ட்வீட்டையும் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டனாக எனது கவனம் எல்லாம் இதில் மட்டுமே இருக்கும். அதுவே எனது முதல் பணி – ரோஹித் சர்மா பேட்டி

அதில் விராட் கோலி 95 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 65 வெற்றிகளை பெற்று உள்ளதை சுட்டிக் காண்பித்து ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல கேப்டனாக இருந்து உள்ளீர்கள் உங்களுக்கு நன்றி என அந்த பதிவினை வெளியிட்டுள்ளது. பி.சி.சி.ஐ-யின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement