கேப்டனாக எனது கவனம் எல்லாம் இதில் மட்டுமே இருக்கும். அதுவே எனது முதல் பணி – ரோஹித் சர்மா பேட்டி

Rohith
Advertisement

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அண்மையில் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohith

இதன் காரணமாக இனிவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். இந்நிலையில் தான் புதிய முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு தனது பணி என்ன என்பது குறித்து தற்போது ரோகித் சர்மா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடுவது எப்பொழுதும் அழுத்தம் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். அதிலும் கேப்டன் பொறுப்பினை ஏற்று விளையாடுவதால் இன்னும் சற்று அதிகமான அழுத்தம் இருக்கும். மக்கள் எப்போதும் இந்திய அணியைப் பற்றி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.

rohith

ஒரு கிரிக்கெட் வீரராக இதை சொல்கிறேன். இப்போது எனது முதல் பணி மற்றும் கவனம் எல்லாமே எனது வேலையில் கவனத்தைச் செலுத்துவது மட்டும் தான். இந்திய அணியின் வெற்றி குறித்து மட்டும் தான் நான் யோசிக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைந்த லக்னோ மற்றும் அகமதாபாத் அணிக்கு ஏற்பட்ட சோதனை – தடைக்கும் வாய்ப்பு

அதை தவிர்த்து மக்கள் கூறும் விமர்சனங்களையும் அல்லது அவர்கள் பேச்சுக்களையும் நான் கவனிக்க விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் பேச்சை நிறுத்த முடியாது. இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன், இனியும் சொல்வேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement