ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைந்த லக்னோ மற்றும் அகமதாபாத் அணிக்கு ஏற்பட்ட சோதனை – தடைக்கும் வாய்ப்பு

auction-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐ.பி.எல் தொடரை சென்னை அணியானது கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து 15-வது ஐபிஎல் சீசனானது ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் தற்போது பி.சி.சி.ஐ மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

IPL
IPL Cup

அதன்படி அண்மையில் துபாயில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அதிகாரபூர்வமாக தெரிவுசெய்யப்பட்டு இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அகமதாபாத் அணியை ஏலத்தில் எடுத்துள்ள சிவிசி குழுமம் சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோதமான நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது அகமதாபாத் அணி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ipl-2021-ind

அதோடு லக்னோ அணியையும் எந்த வீரரையும் எடுக்கக்கூடாது என்றும் அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு கூறியுள்ளது. ஒருவேளை அகமதாபாத் அணி மீது உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அகமதாபாத் அணி விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ராஜினாமா செய்த பிறகும் இப்படியா ? பொய் சொல்லி வசமாக சிக்கி கொண்ட ரவி சாஸ்திரி – வச்சி செய்யும் ரசிகர்கள்

மேலும் இதற்கான விசாரணை முடியும்வரை இவ்விரு அணிகளும் எந்தவொரு வீரரையும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement