ராஜினாமா செய்த பிறகும் இப்படியா ? பொய் சொல்லி வசமாக சிக்கி கொண்ட ரவி சாஸ்திரி – வச்சி செய்யும் ரசிகர்கள்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த ரவிசாஸ்திரி அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது இந்த பதவி காலத்தில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி கோப்பைகளை கைப்பற்ற முடியவில்லை என்ற குறை மட்டுமே இருந்தது. மற்றபடி அவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி வலுவாக இருந்தது என்றே கூறலாம்.

Shastri

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் விலகியதை அடுத்து அணியில் நடந்த பல விடயங்களை வெளிப்படையாக ரவிசாஸ்திரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஒரே அணியில் ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக் ஆகிய 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்தது தன் முடிவு அல்ல என்றும் அது ஒரு தவறான முடிவு என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது அம்பத்தி ராயுடு ஆகிய இருவரில் ஒருவர் நிச்சயம் அந்த உலகக்கோப்பை அணியில் இருந்திருக்க வேண்டும் என்றும் வெளிப்படையான தனது கருத்தினை அளித்திருந்தார். இப்படி அவரவர் பேசியிருந்த சில விடயங்கள் இணையத்தில் வைரலாக தற்போது ரவி சாஸ்திரி தேவையில்லாமல் பேசிய ஒரு விஷயம் ரசிகர்கள் மத்தியில் அவரை மீண்டும் விமர்சிக்கும் வகையில் மாறியுள்ளது.

Bumrah-1

அந்த விடயம் யாதெனில் 2017 ஆம் ஆண்டின் போது ஜஸ்பிரித் பும்ராவை நான்தான் தென்ஆப்பிரிக்க தொடருக்கு தயாராகுமாறு கூறி அணியில் சேர்த்ததாக அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே தான் அணி வீரர்களை தேர்வு செய்யும்போது எந்தவித கருத்துக்களையும் கூற மாட்டேன் என்று சொல்லிய ரவி சாஸ்திரி எவ்வாறு பும்ராவை மட்டும் தேர்வு செய்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – ஷேன் வார்ன் தேர்வு

அது மட்டுமின்றி அதற்கு முன்பாகவே பும்ரா அணியில் இணைந்து விட்டார் என்றும் ரசிகர்கள் சுட்டிக் காண்பித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement