தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – ஷேன் வார்ன் தேர்வு

Warne
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான ஷேன் வார்ன் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த பட்டியலின் முதல் மூன்று இடங்களில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தேர்வு செய்துள்ள இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Smith

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்திவரும் அவர் எந்த நாட்டிலும், எந்த மைதானத்திலும், எந்த ஒரு பவுலருக்கும் எதிராக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திவதால் அவருக்கு முதல் இடத்தினை வழங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 7000 ரன்களை குவித்தவரும் இவரே.

அதன் பின்னர் இரண்டாவது இடத்தில் ஜோ ரூட்டை தேர்வு செய்துள்ளார். ஏனெனில் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் சதம் அடித்துள்ளார். அது மட்டுமின்றி இந்த 2021 ஆம் ஆண்டு முழுவதுமே சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி உள்ளார்.

Root

மூன்றாவது கேன் வில்லியம்ஸ்சனை தேர்வு செய்துள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அவர்கள் கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக அவரது பேட்டிங்கும் அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – இன்னும் ஓயலயா

நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் விராட் கோலி மற்றும் மார்னஸ் லாபுஷேன் ஆகியோரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement