பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – இன்னும் ஓயலயா

wivspak
- Advertisement -

பாகிஸ்தானில் நிலவி வரும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு அணியும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடாமல் இருந்து வருகின்றது. எந்த ஒரு அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதாக இருந்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் விளையாடும். இந்நிலையில் பாகிஸ்தானில் மெல்ல மெல்ல போட்டிகள் நடக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

pakvswi

- Advertisement -

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு அணியும் முன் சென்று விளையாட சம்மதித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட முடிவு செய்தது. அதன்படி தற்போது பாகிஸ்தானுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தொடரில் பங்கேற்பதில் ஒரு பெரிய சிக்கலை சந்தித்துள்ளது.

wi

அதன்படி போட்டி நடைபெற இருந்த கராச்சி நகர் மைதானத்தை சுற்றி 5,000 போலீசாரை காவலுக்கு நிறுத்தி இருந்தாலும் தொடர் தொடங்கவுள்ள நிலையில் தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 2018 ஆம் ஆண்டிலே நான் ஹார்டிக் பாண்டியாவை எச்சரித்தேன் – சோயிப் அக்தர் ஓபன்டாக்

இதன் காரணமாக தற்போது அந்த அணி வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement