2018 ஆம் ஆண்டிலே நான் ஹார்டிக் பாண்டியாவை எச்சரித்தேன் – சோயிப் அக்தர் ஓபன்டாக்

Akhtar
Advertisement

இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்தார். அதன் பின்னர் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இப்போது வரை அவரால் பந்துவீச முடியாத நிலைமை உள்ளது.

Pandya

அதுமட்டுமின்றி தற்போது வரை அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்து அவர் தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்றும் தான் முழுத் தகுதியுடன் அணிக்கு திரும்பும் வரையில் தன்னை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ யிடம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில் : 2018 ஆம் ஆண்டு நான் பாண்டியாவிடம் சில யோசனைகளைக் கூறி இருந்தேன். அப்போதே பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் இருவரிடமும் பலவீனமாக இருந்ததாக கூறினேன். அவர்கள் இருவரும் ஒல்லியாக உறுதியாக இருந்ததால் அவர்கள் காயம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தேன்.

pandya

அதன்படி அடுத்த சில நாட்களிலேயே பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இன்று வரை களத்திற்கு வரமுடியாத நிலையில் அவர் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement