இன்னைக்கு மட்டும் அந்த ரிசல்ட் வந்தா. பும்ரா தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் – பி.சி.சி.ஐ தகவல்

Bumrah
- Advertisement -

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது நாளை பர்மிங்காமில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட தொடரை கைப்பற்றி விடும். அதே வேளையில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் தொடரானது சமநிலையில் முடிய வாய்ப்பு உள்ளது.

indvseng

- Advertisement -

இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மாவிற்கு பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை பி.சி.சி.ஐ யின் மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

எனவே அவர் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் தற்போது வரை சிக்கல் நீடிக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவது குறித்தும் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும். ஆனாலும் நேற்று வரை அடுத்த கேப்டன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில் :

bumrah 3

ரோகித் சர்மா தற்போதும் இந்த போட்டியில் இருந்து விலக்கப்படவில்லை. அவருக்கு இறுதியாக ஒரு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் அந்த பரிசோதனையின் முடிவிற்கு பிறகுதான் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறப்படும் என தெரிவித்திருந்தார். அதோடு ரோஹித் சர்மா விளையாடுவது குறித்த முடிவினை தான் நேரடியாக தெரிவிக்க முடியாது என்றும் அதனை இந்திய அணியின் நிர்வாகம் தான் தெரிவிக்கும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இன்னும் அதிகாரப்பூர்வமாக ரோகித் அணியிலிருந்து வெளியேற்றப்படவில்லை என்று தெரிகிறது. ஆனால் இன்று பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலின் படி ரோகித் சர்மாவிற்கு இன்று இறுதி கொரோனா பரிசோதனை நடைபெறும் அதிலும் ரோகித் சர்மாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் பும்ரா தான் அணியின் கேப்டனாக இருந்து கடைசி டெஸ்ட் போட்டியை வழிநடத்துவார் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மோர்கனும் தோனி மாதிரியானவர், அவர் இல்லாமல் எப்படி விளையாட போறோம்னு தெரியல – இங்கிலாந்து வீரர் புகழாரம்

இதன் காரணமாக இன்று ரோகித் குறித்து வெளியாகும் ரிசல்ட் மூலம் தான் இந்திய அணியின் புதிய கேப்டன் நியமனம் இருக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை ரோகித்துக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமடையாமல் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் நிச்சயம் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவிற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement