மோர்கனும் தோனி மாதிரியானவர், அவர் இல்லாமல் எப்படி விளையாட போறோம்னு தெரியல – இங்கிலாந்து வீரர் புகழாரம்

KKRvsCSK
- Advertisement -

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து தொடக்கூட முடியாமல் காலத்திற்கும் ஏங்கி வந்த உலக கோப்பையை கடந்த 2019இல் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக வென்று கொடுத்த இயன் மோர்கன் தனது 35 வயதிலேயே சுமாரான பார்ம் மற்றும் காயங்கள் காரணமாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். அயர்லாந்தில் பிறந்து அந்த அணிக்காக கடந்த 2006இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து 2009 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய அவர் ஒருநாள் மற்றும் டி20 எனப்படும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்து தனக்கென்று நிலையான இடத்தைப் பிடித்தார்.

Eoin Morgan 2019 WOrld Cup

- Advertisement -

அதனால் 2014இல் தேடி வந்த கேப்டன் பொறுப்பில் 2015 உலக கோப்பையில் அவரது தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இருப்பினும் அதற்காக பின்வாங்காத அவர் அதிரடி எனும் ஆயுதம் மட்டுமே வெற்றியை கொடுக்கும் என்று நம்பி அதற்காக ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், மொய்ன் அலி, ஜானி பேர்ஸ்டோ என அதிரடியான வீரர்களை கண்டறிந்து அதிகப்படியான ஆதரவும் வாய்ப்பையும் கொடுத்தார்.

உலககோப்பை கேப்டன்:
குறிப்பாக மேற்குறிப்பிட்ட வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அறிவுறுத்தி அவர்களை மேலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மாற்றினார். அதன் பயனாக 2016 முதல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடி படையாக மாறி அதிகப்படியான வெற்றிகளைக் குவிக்க தொடங்கிய இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணுக்கு வரும் வெளிநாட்டு அணிகளை சரமாரியாக அடித்து பெரும்பாலான போட்டிகளில் 400 ரன்களை அசால்டாக குவித்தது. அப்படி அதிரடி படையாக அவரது தலைமையில் எதிரணிகளை மிரட்டிய இங்கிலாந்து சொந்த மண்ணில் நடைபெற்ற 2019 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

England

ஆனால் அதன்பின் பார்மை இழந்த அவர் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறியதுடன் அடுத்தடுத்த காயங்களையும் சந்தித்தார். குறிப்பாக 2021இல் ரொம்பவே தடுமாறிய அவரை அதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டன் பதவியிலலிருந்து விடுவித்து மொத்தமாக கழற்றி விட்டது. அந்த நிலைமையில் சமீபத்திய நெதர்லாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் 3-வது போட்டியில் காயத்தால் வெளியேறினார். அப்படி பார்முக்கு திரும்ப முடியாமல் தாம் உருவாக்கிய அதிரடியான இங்கிலாந்துக்கு தாமே பாரமாக விரும்பாத அவர் 35 வயதிலேயே அர்ப்பணிப்புடன் விடை பெற்றுள்ளார்.

- Advertisement -

தோனி மாதிரியே:
இந்நிலையில் இந்தியாவின் மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி போலவே இயன் மோர்கனும் அணியில் உள்ள தனது வீரர்களை நம்பி அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்பையும் கொடுத்து வளர்க்கும் அற்புதமான கேப்டன் என்று அந்த இருவரின் தலைமையிலும் விளையாடிய இங்கிலாந்து வீரர் மொயீன் அலி பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனியின் தலைமையில் விளையாடிய அவர் இதுபற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

cskvskkr

“நான் மோர்கன் தலைமையில் விளையாடியுள்ளேன். அதேசமயம் எம்எஸ் தோனியின் தலைமையிலும் விளையாடியுள்ளேன். அவர்களின் குணத்தை பற்றி பார்க்கும் போது இருவருமே அமைதியாக இருப்பதுடன் தங்களது வீரர்களிடம் விஸ்வாசமானவர்களாக இருந்தனர். மோர்கன் மிகச் சிறந்த கேப்டன், மிகச்சிறந்த வீரர். அவருக்கு முன்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நாங்கள் ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்தோம்”

- Advertisement -

“அவர் வீரர்களின் எண்ணங்களையும் வருங்காலத்தைப் பற்றிய கோணங்களையும் மாற்றினார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தற்போது அதிரடியாக விளையாடுவதற்கும் அவரே காரணம் என்று நான் நம்புகிறேன். நீங்கள் சரியான மனநிலையில் இருந்தால் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடலாம் என்பதை அவர் எங்களுக்கு கற்பித்தார். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து வருகிறோம்” என்று புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க : தகுதியிருந்தும் கேப்டனாக செயல்படமால் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டாப் 5 ஜாம்பவான்கள்

இத்தனை நாட்களாக அவரது தலைமையில் விளையாடிவிட்டு இனிமேல் வேறொரு கேப்டன் தலைமையில் விளையாடுவது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் அபாரமான வேலையை செய்துள்ளார். இது அவமானம். அவரது தலைமையில் விளையாடாமல் இருப்பது விசித்திரமானது. அனைத்தும் முன் நோக்கி நகர்வதால் அதற்கேற்றார் போல் பழகிக் கொள்ள வேண்டும் என்பது வருத்தமாக இருக்கிறது. அதேசமயம் தன்னலமில்லாமல் அணியைப் பற்றி அவர் சிந்திப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement