தகுதியிருந்தும் கேப்டனாக செயல்படமால் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டாப் 5 ஜாம்பவான்கள்

Laxman
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாட வேண்டிய வீரர்கள் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக செயல்பட்டு மாநிலங்களுக்காக அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று கொடுத்து திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். அதற்காக கடினமாக உழைக்கும் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அரங்கில் நாட்டுக்காக முதல் போட்டியில் அறிமுகமாவதற்கே நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்படி காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் 10இல் 5க்கும் மேற்பட்ட போட்டிகளில் முழு திறமையை வெளிப்படுத்தி மிகச் சிறப்பாக விளையாடினால் தான் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

sehwag

- Advertisement -

அதுபோல் தொடர்ச்சியாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொடுக்கும் வீரர்களை ரசிகர்கள் தங்களது ஹீரோக்களாக கொண்டாட தவறவே மாட்டார்கள். அப்படி படிப்படியாக முன்னேறி ஸ்டார் வீரர்களாக உருவெடுக்கும் வீரர்கள் ஒரு கட்டத்தில் அந்த அணியின் நீக்க முடியாத முக்கிய முதுகெலும்பு வீரராக மாறி பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஜாம்பவான்களாக அவதரிப்பார்கள். பொதுவாகவே அதுபோன்ற நட்சத்திரமும் திறமையும் தரமும் இதர அணி வீரர்களுடன் நண்பனாகப் பழகும் வீரர்கள் ஒரு அணியை முன்னின்று வழி நடத்துவதற்கு தகுதியானவர்களாகவும் மாறுவார்கள்.

கேப்டனாகாத ஜாம்பவான்கள்:
இருப்பினும் பெரும்பாலான தருணங்களில் ஒரு பேட்ஸ்மேனாக இருப்பவரையே பெரும்பாலான அணி நிர்வாகங்கள் கேப்டனாக நியமிப்பதால் 90% ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் கேப்டன்ஷிப் செய்வதற்கு தகுதி இருந்தும் அந்த வாய்ப்பை பெற மாட்டார்கள். அல்லது அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஒரு கேப்டனின் கீழ் விளையாடுவதால் சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தனது நாட்டை ஒரு முறை கூட வழி நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்காது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக தகுதிகள் இருந்தும் அந்த வாய்ப்பு கிடைக்காத டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

Muralitharan

5. முத்தையா முரளிதரன் 133: 1992இல் அறிமுகமாகி சுமார் 20 வருடங்கள் தனது அற்புதமான சுழல் பந்து வீச்சால் 800 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்து எதிரணிகளை திணறடித்த இவருக்கு ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு நிச்சயமாக தகுதியும் அனுபவமும் இருந்தது.

- Advertisement -

இருப்பினும் அர்ஜுனா ரணதுங்கா, மகிளா ஜெயவர்தனே போன்ற நட்சத்திர வீரர்கள் இலங்கையை வழி நடத்தியதால் மொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் கடைசி வரை ஒரு முறை கூட கேப்டனாக செயல்படாமல் இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

4. விவிஎஸ் லக்ஷ்மண் 134: டெஸ்ட் கிரிக்கெட் கண்ட மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக கருதப்படும் இவர் இந்தியா சரிந்த பல போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அனுபவத்தை கொண்டவர்.

- Advertisement -

இவரும் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவான் கேப்டன்கள் தலைமையில் கேரியர் முழுக்க விளையாடியதால் மொத்தம் விளையாடிய 134 போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவை வழி நடத்தும் வாய்ப்பை பெறவில்லை.

3. ஷேன் வார்னே 145: முரளிதரனை விட தனது அற்புதமான மேஜிக் நிறைந்த மாயாஜால சுழல் பந்து வீச்சால் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா போன்ற் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களையும் திணறடித்த இவருக்கு ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு அற்புதமான கேப்டன்ஷிப் திறமையும் இருந்தது.

- Advertisement -

ஐபிஎல் 2008 தொடரில் ஒருசில நட்சத்திர வீரர்களையும் நிறைய அனுபவமில்லாத வீரர்களையும் வைத்து முதல் வருடத்திலேயே ராஜஸ்தானுக்கு கோப்பையை வென்று காட்டியதே அதற்கு சாட்சியாகும். இருப்பினும் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் எனும் 2 மகத்தான கேப்டன்கள் தலைமையில் விளையாடிய இவர் மொத்தமாக விளையாடிய 145 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வழி நடத்தும் வாய்ப்பை பெறவில்லை.

Broad

2. ஸ்டுவர்ட் ப்ராட் 155: இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக தற்போதும் விளையாடி வரும் இவர் இதுவரை 155 போட்டிகளில் பங்கேற்கும் ஒரு முறை கூட தனது அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெறவில்லை.

தற்போது 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவருக்கு பென் ஸ்டோக்ஸ் போன்ற இளம் வீரர்கள் கேப்டனாக செயல்படுவதால் அந்த வாய்ப்பு கடைசிவரை கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Anderson-3

1. ஜேம்ஸ் அண்டர்சன் 171: கடந்த 3 தசாப்தங்களாக தனது அபாரமான ஸ்விங் நிறைந்த வேகப்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

40 வயதை தொட்டும் கொஞ்சம் கூட பவர் குறையாமல் இருமடங்கு வீரியமாக பந்து வீசும் இவர் பழைய சரக்கை போல் நாளுக்கு நாள் அற்புதமாக செயல்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை 171 போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் விளையாடியுள்ள இவர் 40 வயதை கடந்து விட்டதால் அந்த வாய்ப்பு பெறாமலேயே ஓய்வு பெறுவார் என்று நம்பலாம்.

Advertisement