பி.சி.சி.ஐ எடுக்கவுள்ள அதிரடி : ரோஹித்தோடு சேர்த்து 2 வீரர்களை வெளியேற்ற இருக்கும் முடிவு – புதிய கேப்டன் தேர்வு

Hardik Pandya and Rohit Sharma
- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை விராட் கோலியின் தலைமையில் கைப்பற்ற தவறியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரையும் ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்ற தவறியது இப்படி அடுத்தடுத்து இரண்டு டி20 உலக கோப்பை தொடர்களை சீனியர் வீரர்கள் கேப்டனாக இருந்தும் இந்திய அணி தவறவிட்டது தற்போது அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

INDia

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் பிசிசிஐ விரைவாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் டிராவிட் என மூவரையும் அழைத்து மீட்டிங் நடத்த உள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி அந்த மீட்டிங்கில் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இளம் இந்திய அணியை உருவாக்க இருப்பதாகவும் இதன் காரணமாக அணியில் உள்ள பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற டி20 தொடரை பாண்டியா தலைமையில் இந்திய அணி கைப்பற்றிய அசத்திய வேளையில் இனி பாண்டியா டி20 கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Rohit-and-Kohli

மேலும் இனி ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று தெரிகிறது. அதோடு டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இனி இடம்பெற மாட்டார்கள் என்றும் அவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலேயே விளையாடுவார்கள் என்றும் பி.சி.சி.ஐ தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி : நாங்கள் எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெற சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஓய்வினை அறிவித்தால் அதனை நாங்கள் வரவேற்போம். ஆனாலும் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரது பங்களிப்பு எங்களுக்கு தேவை என்பதால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : அடுத்த ஹார்டிக் பாண்டியா ரெடி. பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அசத்தும் ஜம்மு காஷ்மீர் வீரர் – யார் இவர்?

அதோடு அடுத்த ஓராண்டிற்கு டி20 கிரிக்கெட்டில் சீனியர் வீரர்களை பெரிய அளவில் பார்க்க முடியாது என பிசிசிஐ தெளிவாக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டாலும் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கான தொடக்கப் பணியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement