அகமதாபாத் மட்டுமல்ல. அடுத்த ஐ.பி.எல் தொடரில் இணையும் மற்றொரு அணி – பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து கசிந்த தகவல்

ipl trophy

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 13 தொடர் முடிவடைந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ், 5 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளனர். இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் செப்டம்பர் மாதம் துவங்கி அன்மையில் நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. பெரும் சந்தேகத்திற்கு இடையே இந்த தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

mi

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அணி உருவாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் பிசிசிஐயின் பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் ஏற்பட இருக்கும் முக்கிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு அணி இல்லாது இரண்டு அணிகளை இணைப்பது அதுமட்டுமின்றி மூன்று அணித் தேர்வாளர்கள் நியமிப்பது போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி பேசப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு புதிய அணிகளில் ஒன்று அகமதாபாத் நகரை மையப்படுத்தி இருக்கும் என்றும் அதனை அதானி குழுமம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rohith

மேலும் இன்னொரு புதிய அணிக்கு உரிமையாளர் தேர்வுக்கு கடும் போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் : அணியின் தேர்வுக்குழு கிரிக்கெட் கமிட்டியின் ஒரு பகுதியாகும். தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட வேண்டும் அவை அனைத்தும் சட்டரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த புதிய அணிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

motera

அடுத்து ஆண்டு மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுவாரசியமாக அமையும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.