2022இல் சொதப்பிய இந்திய அணி – டிராவிட், லக்ஷ்மன், ரோஹித்தை வெளுக்கும் பிசிசிஐ, வெளியான தகவல் இதோ

dravid
- Advertisement -

2023 ஆங்கில புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கும் நிலையில் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ராகுல் உள்ளிட்ட சீனியர் நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடுகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே டி20 தொடரில் ஓய்வெடுக்கும் அவர்கள் ஒருநாள் தொடரில் விளையாடுகிறார்கள்.

INDia

- Advertisement -

முன்னதாக நடைபெற்ற 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலை துவங்கியுள்ளது. இருப்பினும் 2023 உலக கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2022ஆம் ஆண்டு சாதாரண இருதரப்பு தொடர்களை தவிர்த்து பெரும்பாலும் தோல்விகளே பரிசாக கிடைத்ததால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் முதல் பிசிசிஐ வரை அதிருப்தியில் உள்ளனர்.

பிசிசிஐ அதிருப்தி:
குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் பேட்டிங்கில் ரன்களை குவிக்க தடுமாறி வரும் ரோகித் சர்மா முக்கிய நேரங்களில் அணி வீரர்களிடம் கோபமடைவதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் காயம் அல்லது பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலும் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருந்த அவரால் வரலாற்றிலேயே முதல் முறையாக 2022ஆம் ஆண்டு 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

dravid

அதனால் நிறைய ரசிகர்கள் இதற்கு விராட் கோலியே பரவாயில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. மறுபுறம் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி தற்போது ரசிகர்களிடம் இல்லை. ஏனெனில் உலக கோப்பைக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சொதப்பலாக செயல்பட்டாலும் இந்தியா வென்றாலும் தோற்றாலும் ஒவ்வொரு தொடருக்கும் மாற்றங்கள் செய்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக சொதப்பலாக செயல்பட்டு வரும் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடரில் 22 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற அசத்திய குல்தீப் யாதவ் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் அவரது தலைமையில் எந்த வீரர்களுக்கும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் இந்திய அணியும் செட்டிலாகாமல் இருந்து வருகிறது. அப்படி சொதப்பலாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரிடம் 2022இல் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பிசிசிஐ கேள்வி எழுப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Dravid-and-Laxman

அது போக 2022இல் பும்ரா முதல் ஜடேஜா வரை நிறைய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது வெளியேறினார்கள். அதனால் அவர்களை கண்காணித்து குணமடைந்து விட்டார்கள் என்று சான்றிதழ் வழங்கும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அதையும் விசாரிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது பற்றி மூத்த பிசிசிஐ அதிகாரி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்ககேஎஸ் பரத் வேண்டாம், பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ரிஷப் பண்ட்டுக்கு பதில் அவர் தான் சரியானவர், சபா கரீம் கோரிக்கை

“தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் சமீபத்திய இந்தியாவின் செயல்பாடுகளை விரைவில் பிசிசிஐ தலைமை அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளனர். மேலும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தையும் பிசிசிஐ நிர்வாகிகளிடம் விவரிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார். முன்னதாக ஏற்கனவே சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கிய பிசிசிஐ வரும் காலங்களில் தொடர் தோல்விகள் பரிசாக கிடைக்கும் பட்சத்தில் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரையும் 2023 உலக கோப்பையுடன் கழற்றி விடும் முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement